பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

33

ஒவ்வொருவராக ஓடிவிட்டனர். காஸியஸ் இனித் தனக்கும் புரூட்டஸுக்கும் இவ்வுலகம் இல்லை எனக் கண்டு, தன் புரூட்டஸ் இறக்குமுன் - தன் புரூட்டஸ் தோல்வி என்ற சொல்லைக் கேட்குமுன் - தான் இறக்கவேண்டுமென நினைத்துப் பணியாள் பிடித்துக்கொண்ட வாள்மீது வீழ்ந்து இறந்தான்.

அவ்வீர முடிவைக்கேட்ட புரூட்டஸ் தனக்கும் முடிவு வந்ததை உணர்ந்தான். போரில் ஸீஸர் உருவமே எதிரியுடன் எதிரியாய் நின்று தன் கட்சியாரைக் கொன்று வென்றதை அவன் கண்டான். இறுதியில் தன்னை நாடி அக்டேவியஸ் படைவீரர் வருவதையுங் கேள்வியுற்றான். 'ஸீஸர்! உன் பழி தீர்க,' என்று கூறி அவனும் தன் வாளை நட்டு அதன்மீது வீழ்ந்திறந்தான்.

ஸீஸரோடு ரோமின் அரசியற் பெருமை போயிற்றெனில், புரூட்டஸோடு அதன் அறிவியல் ஒழுக்க இயல் பெருமையும் போயிற்று என்னல் வேண்டும். அவன் வாழ்வையும் மாண்பையும் வாயாரப் போற்றாதார் இல்லை. உணர்ச்சி வசப்படும் இயல்பற்ற அக்டேவியல் ஸீஸர்கூட 'ரோமின் பெருமையனைத்தும் திரண்டெழுந்த பெரியோய்! இழந்த ஸீஸரையும் மறந்து நின்னை இழந்த இழப்பே இழப்பாக நின்று எம்நாட்டுத் தாய்க்கு இனி யார்தாம் ஆறுதல் அளிப்பர்! ஸீஸரும் நீயும் வாழ்ந்த நாட்டில் தகுதியுடையவர் யாரோ?" எனக் கையறு நிலைசெய்தி அவலமுற்றனன்.

பெரியவரான ஸீஸரின் பழியே பெரியோராகிய புரூட்டஸையுங் கொண்டுபோக, ரோம்பேரரசி கணவனையும் அவன் தந்த தனிமகனையும் இழந்த இழந்தாயெனக் கைம்மை நோன்பு நோற்பாளாயினள்.

அடிக்குறிப்புகள்

1. Julius Caesar

2.

Rome

3.

Italy

4.

Partrician

5. Plebians