பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. கோரியோலானஸ் (Coriolonus)

கதை உறுப்பினர்

ஆடவர்:

1. கயஸ்மார்க்கியஸ்: கோரியோலியை வென்றதனால் கோரியோலானஸ் என்றழைக்கப்பட்டவன். ரோமின் ஒப்பற்ற வீரன் வலம்னியா மகன், வர்ஜிலியா கணவன்-கயஸ் தந்தை- ரோமின் பகைவனான தாக்குவினை முறியடித்தவன்.

2. துள்ளஸ் ஆஃபீதியஸ்: ரோமர் பகைவரான வால்ஷியரின் தலைவன்-கோரியோலானஸால் முறியடிக்கப் பட்டவன் - கோரியோலானஸ் ரோமின் பகைவனான போது நண்பனானவன்.

3. காமினியஸ்: கோரியோலி முற்றுகையின் போது கோரியோலானஸையும் நடத்திச் சென்ற ரோமப் படை த்

தலைவன்.

4. தீதஸ் லார்ஷியஸ்: கோரியோலி முற்றுகையில் கோரியோலானஸுடன் சென்ற துணைத்தலைவன்.

5. மெனெனியஸ் அக்ரிப்பா: கோரியோலானஸ் நண்பன்- நாத்திறமும் நயமுமுடையவன்-பொதுமக்களை உயர்த்தும் சீர்திருத்த நோக்கமுடைய பெருமகன்.

6. தார்க்குவின்: ரோமக்குடியரசின் பகைவனான பழைய ரோமக் கொடுங்கோலரசன்.

7. கயஸ்: கோரியோலானஸ் புதல்வன்-சிறுவன்