பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம்

பெண்டிர்:

1. வலம்னியா: கோரியோலானஸின் தாய்-அறிவும்

அடக்கமும் உடையவள்.

2. வர்ஜிலியா: கோரியோலானஸின் மனவிை-அறிவும் அடக்கமும் உடையவள்.

3. (பிற மாதர்)

கதைச் சுருக்கம்

கயஸ்மார்க்கியஸ் என்ற வீரன் ரோமப் பெருமக்கள் குடியிற் பிறந்தவன்; குடித்தருக்கு உடையவன். அவன் ரோமின் பகைவனான பழைய ரோமக் கொடுங்கோலரசனை வென்றும், வால்ஷியர் நகராகிய கோரியோலியை வென்று அவர்கள் தலைவனான துள்ளஸ் ஆஃபீதியஸை முறியடித்தும் புகழ்பெற்று ரோமின் முடிசூடா மன்னனாய் விளங்கினான். கோரியோலியை வென்றதனால் கோரியோலானஸ் என்ற அவன் பெருமக்கள் விருப்பப்படி நகர்த் தலைவனாகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டான். நின்றபோது வழக்கப்படி வாக்காளர்களான பொதுமக்களை வணங்க மறுத்ததனால் பொதுமக்களும் அவர்கள் தலைவர்களான திரிபூணர்களும் அவனை வெறுத்து நகரினின்றும் துரத்தினர். அதனால் சினங்கொண்டு அவன் ஆஃபீதியஸுடன் சேர்ந்து ரோமை அழிக்க வஞ்சினங் கூறினான்.

ரோமர் கோரியோலானஸின் தாயையும் மனைவியையும்

அவன் குழந்தையுடன், ரோம மாதர் தலைமையில் சென்று அவள் வஞ்சினத்தினின்றும் தம்மைக் காக்கும்படி வேண்டினர். அவர்களும் அங்ஙனம் என்று அவன் மனமுருகப் பேசித் தம் திறமனனத்தும் காட்ட, கோரியோலானஸ் தன் கடமையையும், சினத்தையும் அவர்களுக்காக விட்டுக்கொடுத்தான். ஆனால் வால்ஷியர் அவன் தம்மைக் காட்டிக் கொடுத்ததாகக் கொண்டு அவனைக் கொன்று சின்னாபின்னப்படுத்தினர். ரோமர் அதன்பின் கழிவிரக்கம் கொண்டனர்.