பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

1. வெற்றியும் செருக்கும்

37

1கயஸ்மார்க்கியஸ் என்பவன் ரோம் நகரத்தின் பழைய அரசர் குடியிற் பிறந்தவன். இளமையிலேயே அவன் தந்தை இறந்து போனமையால், அவன் தாயாகிய 2வலம்னியாவே அவனை வளர்ந்து வந்தாள்.

வலம்னியா ரோம்நாட்டு வீரத்தாய்களுக்கு ஓர் இலக்கிய மானவள். ஆகவே, அவள் தன் மகனுக்கு உடற்பயிற்சி, வில்லாண்மை, வாள்வீச்சு முதலிய வீரருக்கான கல்விகளை முற்றிலும் பயிற்றுவித்ததுடன் அவன் பதினாறு ஆண்டு எய்தியதும் அவனைப் போருக்கும் அனுப்பினாள். அவனும் ரோமின் பழைய கொடுங்கோலரசனும் ரோமக் குடியரசின் முதற்பெரும்பகைவனுமான தார்க்குவினை எதிர்த்துமுறியடித்து, அவனைச் சார்ந்த வீரரிடம் அகப்பட்டுத் துன்புறவிருந்த ரோமனொருவனையும் காப்பாற்ற மீட்டு வந்தான். இவ்வீரச் செயலை அந்நகரத்தார் அனைவரும் வியந்து பாராட்டிஅவனுக்கு அந்நாட்டு வழக்கப்படி வாகை முடி சூட்டி மகிழ்ந்தனர்.

3

வீரமில்லா மகன் ஒருவன் வாழ்தலினும் வீரமிக்க மக்கள் பதின்மர் மாள்தலையே சிறப்பாகக்

சிறப்பாகக்

மகிழும்

கருதி

பெருந்தகைமையுடைய வலம்னியா.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும், தன் மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்”

-திருக்குறள்

என்பதற் கிணங்கத் தன் மகன் புகழ் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள்.

கயஸ்மார்க்கியஸ் அவள் வளர்ப்புத் திறனுக்கோர் அரிய நற்சான்றாக விளங்கினான் என்பதில் ஐயமில்லை. அவனை ஒத்த வீரம், பெருந்தன்மை, நேர்மை, கலங்கா மன உறுதி முதலிய உயர்குணங்கள் படைத்தோர், வீரத்துக்குப் பேர்போன ரோம் நரகத்திற்கூட வேறெவரும் இல்லை எனலாம். வலம்னியா ரோம் மாதருக்கோர் இலக்கியமாக விளங்கியது போலவே, அவனும் ரோம் வீரர்களுக்கோர் இலக்கியமாக விளங்கினான்.