பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம்

ஆனால், குளிர்ச்சியும் ஒளியும் நிறைந்து விளங்குந்திங்களிற் கறை என்பதொன்று காண்பதுபோல, அவ்வளவு குணங்களுக்கும் ஒவ்வாத ஒருகுறை கயஸ்மார்க்கியஸிடம் அதே தாயின் வளர்ப்பின் பயனாகக் காணப்பட்டது. அதுவே அவள் வாயிலாக அவன் அடைந்த குடும்பச் செருக்கும் உயர்குடிச்செருக்கும். இக்குற்றம் உண்மையில் ரோமப் பெருமக்கள் அனைவரிடமுமே இருந்தது என்பது உண்மையே. ஆனால், கயஸ்மார்க்கியஸ் களங்கமற்றவன்; உலகின் சூதுவாது அறியாதவன். எனவே அக்குற்றம் அவன் பேச்சாலும் செயலாலும் பிறருக்குத் தெரியும்படி வெளிப்படையாயிருந்தது.

ரோம் அரசு, பெயருக்குக் குடியரசேயாயினும், அதனை உண்மையில் ஆண்டவர்கள் உயர் குடியிற் பிறந்த செல்வர் களாகிய பெருமக்களே. உண்மையில் ரோம் வெற்றிகளிற் கிடைத்த பொருள் நகருக்குப் பொது உடைமையேயாயினும், நடைமுறையில் அந்நகரின் அரசியல் ஏற்பாட்டின்படி அது பெருமக்களுக்கு மட்டும் உரியதாயிருந்தது. ஏழைப் பொது மக்களுக்கு அதிற் பங்கில்லை என்று மட்டுமில்லை; அவர்கள் கடன் சுமையால் வேறு துயருற்றனர். செல்வர்களான உயர்குடி மக்களின் பக்கமே வழக்கு மன்றங்களும் சட்டமும் நின்று ஏழை மக்களைக் குற்றுயிராக்கி வதைத்தன.

இந்த நிலையில், 'இனி அரசியலிற் பங்கின்றி ரோமின் சண்டைகளில் கலப்பதில்லை,'என்று அவ்வேழை மக்களின் தலைவர்கள் தீர்மானித்தனர். இக்குழப்பத்தை ரோமின் பகைவர்கள் அறிந்து படையெடுத்துவரத் தொடங்கினர். இங்ஙனம் பெருமக்களுக்கு எதிராக வெளியிற் பகைவர் படையெடுப்பும், உள்ளே பொதுமக்கள் கிளர்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன. தமது இக்கட்டான நிலைமையை உணர்ந்து பெருமக்களிற் பலர் வட்டிச் சட்டத்தையும் அரசியல் உரிமை களையும் சற்றுச் சீர்திருத்த உடன்பட்டனர்.

கயஸ்மார்க்கியஸ் பெருமக்களை மட்டுமே மக்களாக மதித்தான். அப்பெருமக்கள் செய்யும் வழிவழிக் கொடுமை களையோ ஏழைப் பொது மக்களின் நிலைமைகளையோ அவன் எண்ணிப் பார்ப்பதில்லை. ஆயினும், பொதுமக்கள் நாட்டின் இடுக்கனைத் தமக்குப் பயன்படுத்திக் கொள்ளுவதைக் கண்டு