பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

39

சீற்றங்கொண்டு அவன் அவர்களுக்கு ஓர் இம்மியளவுகூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முழங்கினான். கயஸ்மார்க் கியஸைப் போலவே பெருங்குடி மக்களிற் பலரும் ஏழைப் பொது மக்களை எதிர்த்தபடியால் அரசியல் மன்றத்தில் சீர்த்திருத்தக் கட்சியின் திட்டம் தோற்றது. இதனைக் கேள்வியுற்றதும் பொது மக்கள், ‘இனி இந்நகரில் இருத்த லாகாது,' என வெளியேறினர். அப்போது பெருமக்கள் பாடு திண்டாட்டமாயிற்று. ஆடல் பாடலிலே வளர்ந்த அப்பெருமக்கள், நாட்டு மக்கள் அனைவரும் போனபின் தனியே நின்று என்ன செய்வது? அவர்கள் கயஸ்மார்க்கியஸின் நண்பனும் சீர்திருத்த விருப்புடையவர் களுள் ஒருவனுமான 4மெனெனியஸ் அக்ரிப்பா என்பவனை அப்பொதுமக்களுக்கு நன்மொழிகள் கூறி அவர்களை அழைத்து வரும்படி அனுப்பினர்.

மெனெனியஸ் ஆண்டு முதிர்ந்தவன்; சொல்நய முடையவன். அவன் பொதுமக்களைப் பலவாறாகப் புகழ்ந்து பேசினான். “ரோமப் பொதுமக்களே! நீங்கள் உடலைவிட்டுச் செல்லும் உயிர்போலும் ஒள்ளிய விளக்கைவிட்டுச் செல்லும் ஒளிபோலும் ரோமைவிட்டுப் போய்விட நினைத்தல் ஆகுமா? அங்ஙனம் போனால் தான் என்ன, உண்மையில் நீங்கள் சென்றுறையும் இடமெல்லாம், ரோமேயாதலின், ரோமைவிட்டு நீங்கள் செல்வது ஒருவன் தன் நிழலைவிட்டுச் செல்ல முயல்வது போலுமன்றோ?

மேலும் நீங்கள் யாரிடம் சினங்கொண்டு போவது? பணம் பெரு மக்களிடம் இருந்தால் என்னன? உங்களிடம் இருந்தால் என்ன? அவர்கள் உங்கள் பணப்பைகள், உங்கள் உணவுப் பொருட் களஞ்சியங்களே, நீங்கயெல்லோரும் ரோம் நகரத்தின் உறுப்புக்கள்! ரோம் நகரத்தின் கைகால்கள் அல்லிரோ! ரோமின் வெற்றி, ரோமின் செல்வம் எல்லாம் கைகால்களாகிய உங்கள் உழைப்பால் வருவதுதாமே? அவ்வுழைப்பால் வரும் உணவை வைத்திருந்து, வேண்டும்போது உயிர் தருங்குருதியாக உறுப்புக்களுக்குக் கொடுக்கும் வயிறன்றோ பெருமக்கள்? அவ்வயிற்றுடன் ஒத்துழைக்காவிட்டால் வருந்தீங்கு வயிற்றுக்கு மட்டுமா? உங்களுக்கு மன்றோ?” என்றிவ்வாறாக அவன்தேன்

சொட்டப் பேசினான்.