பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம்

அஃதொடு அவன் பின்னும், “அவ்வயிறு, இது வரையில் தான் செய்த பிழையை உணர்ந்து வருந்துகின்றது. இன்றுமுதல் பெருமக்கள் உங்கள் வயிறார உணவும் பிறபொருள்களுந் தாமாகவே தந்துதவுவர் என்பதை உறுதியாகக் கொள்க, என்றான்.

து

அவன் பேச்சினாலும் அவன் காட்டிய குறிப்பினாலும் மக்கள் பெரிதும் மனமாறினர். ஆயினும், அவர்கள் தலைவர்களுள் ஐவர் முன் வந்து, “இஃது இடுக்கண் வேளைக்கான கைத்திறனல்லது மனமார்ந்த அருள் மொழி அன்று,” எனக் கூறி அதனை ஏற்க வேண்டாமென மக்களைத் தடைசெய்யலாயினர். இது கண்ட மெனெனியஸ் அவர்களை நோக்கிப், பொது மக்கள் ரோமின் கைகள். ஆனால், நீங்கள் கையின் ஐந்து விரல்கள் போல்வீர்கள். கைக்கு நேர்வழி காட்டி எங்களுடன் ஒத்துழைப்பது உங்கள் கடன்,” என்றான்.

அப்பொழுதும் அவர்களுள் ஒருவன் சீறி எழுந்து, “ஆனால், உங்களுடன் ஒத்துழைப்பதுதான் நேர்வழியோ," என்றான்.அவன் குள்ளமான உருவும் தடித்த உடலும் உடையவன். மெனெனியஸ் சட்டென அவன் பக்கம் திரும்பி, “ஆம், அதுவே நேர்வழி; ஆனால் ரோமின் பெருவிரலாகிய நீ இதனை உணர்ந்து பிறர்க்கு உரைக்காததனாலேதான் அவர்கள் உணரவில்லை,” என்றான். அவனைப் பெருவிரலென்று அவனுருவுடன் ஒப்புமை தோன்றக் கூறியதும் யாவரும் தம் நிலை மறந்து கொல்லென நகைத்தனர். நகைப்பில் பகை பறந்து போயிற்று.

எல்லோரும் ரோமுக்குத் திரும்பினர். நன்மை தீமைகளிற் கருத்தூன்றி அவ்வப்போது வேண்டுவனவற்றைச் செய்ய அவர்களே திரிபூணர்கள் அல்லது தலைவர்கள் ஐவரைத் தேர்ந்தெடுப்பதெனத் தீர்மானித்தனர்.

கயஸ்மார்க்கியஸ் இச்சிறு சீர்த்திருத்தங்களைக் கூட வெறுத்தான். ஆனால் விருப்பு வெறுப்பைக் காட்ட அங்கே நேரமில்ல. பகைவர்களாகிய 5வால்ஷியாகள்' நகர வாயில்வரை வந்துவிட்டனர். அவர்கள் தலைவனோ அந்நாளில் ஒப்புயர்வற்ற போர்வீரனான ‘துள்ளஸ் ஆஃபீதியஸ் ஆவான். அவ்வால்ஷியர் களை எதிர்க்கும்படி ரோம் அரசியல் மன்றத்தார். நகரத்