பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

41

தலைவர்களுள் ஒருவனான 8காமினியஸ் என்பவனை ஒரு பெரும்படையுடன் அனுப்பினர். கயஸ்மார்க்கியஸும் அவனுடன் சென்றான்.

வால்ஷியரை முறியடிப்பதற்குச் சரியான வழி அவர்கள் தலைநகரான கோரியோலியை முற்றுகையிட்டழிப்பதே எனக் காமினியஸ் நினைத்துத் 'திதஸ்லார்ஷியஸ் என்பவனையும் கயஸ்மார்க்கிஸையும் துள்ளஸ் ஆஃபீதியஸை எதிர்க்கச்

சென்றான்.

ரோமப் படையின் ஒரு சிறு பகுதி மட்டுமே தம்மை எதிர்க்க வருகின்றதென்று கண்ட கோரியோலி நகர மக்கள் துணிவு கொண்டு, நகர்வாயில் கடந்து வெளிவந்து ரோமப் படையைப் பின்னிட்டோடும்படி துரத்தினர்.

கயஸ்மார்க்கியஸ் பின்னிடைந்த அவ்வுரோமர்களை நோக்கி ஏளனச் சிரிப்பும் வெகுளியுங் கொண்டு வீர முழக்கத்துடன், தானே தனியாக முன்னேறிச் சென்று நகர்வாயிலிற் புகுந்தான். வாயில் காவலர் உடனே வாயிலை மூடிவிடவே கயஸ்மார்க்கியஸ் உள் அகப்பட்டுப் பகைவர் வாளுக்கும் அம்பு மாரிக்கும் இடையே தனியே நின்று போராட நேர்ந்தது. அவன் துணிவைக் கண்டு பின் தொடர்ந்த ரோம வீரர் ஒருவரிருவரும் வெளியே நின்று, அவன் பகைவர்கள் கையிலகப்பட்டு இறந்தான் என்றே கருதிக்கொண்டு வருந்தினர்.

ஆனால் யானைக் கூட்டத்தில் அகப்பட்ட சிங்கவேற்றைப் போல அவன் உடலெல்லாம் குருதி; பொங்கி வழிந்தும், விடாது போர்செய்து நாற்புறமும் இடம் உண்டுபண்ணி வாயிலை வந்து திறந்தான்.

அவனது செயற்கருஞ் செயல் கண்டு வியந்து ரோமர் அவ்வாயில் வழியே உட்புகுந்து நொடிப் பொழுதில் அந்நகரைக் கைப்பற்றினர்.

காமினியஸ் தலைமையில் ஆஃபீதியஸை எதிர்க்கச் சென்ற ரோமப் படை அப் பெருந்தலைவனது தாக்குதலைப் பொறுக்க மாட்டால் திணறி, நாற்புறமுஞ் சிதறியோடத் தொடங்கிற்று. காமினியஸும் ரோம வீரர் சிலரும் பகைவரிடையில் அகப்பட்டுத் திண்டாடினர். அப்போது அவர்கள் ஒரு தூதனை