பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம்

அனுப்பிக் கயஸ்மாக்கியஸினிடம் தமது நிலைமையைத் தெரிவித்தனர்.

கோட்டையைத் தீதஸ்லார்ஷியஸினிடம் ஒப்படைத்து விட்டு கயஸ், காமினியஸுடன் வந்து சேர்ந்து போர் புரிந்தான். அவனது ஒப்பற்ற திறமையால் இங்கும் வால்ஷியர் படை சிதறியோடிற்று. இதனிடையே கயஸ்மார்க்கியஸ் ஆஃபீதியஸை நேரில் எதிர்த்து வளைக்கலானான்.

தம் தலைவன் எங்கே சிறைப்பட்டு விடுவானோ என்றஞ்சிய வால்ஷிய வீரர், இவனை வலுவில் இழுத்துக் கொண்டோடினர்.

இதுவரையிற் போரிற் புறங்காட்டா வீரனாகிய ஆஃபீதியஸ் இவ்வமதிப்புக்குக் காரணமாகிய கயஸ்மார்க்கியஸ் மீது பழிவாங்குவ தென்று வஞ்சினங் கூறி அகன்றான்.

கயஸ்மார்க்கியஸ் கேரியோலியை வென்ற அருந்திறல் வீரன் என்ற காரணத்தால் அன்றுமுதல் அவன் கோரியோலானஸ் என்று அழைக்கப்பட்டதோடு,ரோமின் முடிசூடாமன்னனாகவும் விளங்கினான்.போருக்குப் போகுமுன் அவன் தம்மை எதிர்த்ததைக் கூட மறந்து பொதுமக்கள் அவனைத் தெய்வமாகக் கொண்டாட லாயினர்.

ரோம் நகரம் அன்று அவன் காலடியிற் கிடந்தது. அதன் தலைமையோ அதன் பொருட்குவையோ எல்லாம் அன்று அவன் நாவசைவிற்கே காத்திருந்தன.

ஏழைகளும், செல்வர்களும், பெண்டிரும், பிள்ளைகளும், வீரர்

சமயத் தலைவரும், அடிமைகளும், யாவரும் பெருந்தகையான அவனை அன்று காணக்கிடைக்காமல் கூட்டத்தை நெருக்கிப் பிசைந்து கொண்டு வந்தனர்.

தென்றற் காற்றுக்கூட நேரிடையாக முகத்தில் வீசியறியாத உயர்குல மாதர்கள், முக்காடின்றி வெயிலையும் பிறர் பார்வையையுங் கூடப் பொருட்படுத்தாமல் மாடியில் வந்து நின்று அவனைக் கண்டு மகிழ்ந்தனர்.

அன்று அவன் வெறும் ரோமன் அல்லன். ரோமர் வணங்கும் தெய்வமேயாயினன் என்னல் வேண்டும்.