பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

43

2. வணங்காமுடி மன்னன்

ஆனால், பொதுமக்கள் கோரியோலானஸின் எதிர்ப்பை மறந்துவிடினும் அவர்கள் தலைவர்களான ஜூலியஸ் புரூட்டஸும்"Rஸினியஸ் வெலுதஸும் அதை மறக்கவில்லை. அவர்கள் அவன் புகழை அழித்துப் பழிவாங்கக் காத்திருந்தனர்.

அவ்வாண்டு, பெருமக்கள் அனைவரும் கோரியோ லானஸையோ தம் தலைவனாக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். தலைவர் தேர்வு எப்போதும் பெருமக்கள் மனப்படியே நடப்பினும், தலைவராக விரும்புவோர் அவ்வொருநாள் பெருமக்கள் உடையையும் பெருங்கடிச் செருக்கையும் விட்டு விட்டு எளிய உடையில் இரவலர் போல் நின்று பொதுமனிதன் ஒவ்வொருவனிடமும் அவன் தருகின்ற இணக்கச் சீட்டுக்காக மன்றாட வேண்டுமென்பது அந்நகரத்தின் மரபு. போரிற் அக்காயங்களைக்

இத்தறுவாயில்

காயமடைந்தவர்கள் காட்டியுஞ் சீட்டிரப்பதுண்டு.

இத்தகைய வாழ்க்கைச் சடங்குகளிற் கோரியோலானஸுக்குப் பழக்கமுங்கிடையாது. அதில் அவன் மனம் செலுத்துவதில்லை. தன் உயர்வு தன் வீரத்தினாலேயன்றி இத்தகைய மன்றாடல் களாலன்று என்ற அவன் நினைத்தான். ஆதலால், இதனை ஒரு வெட்கக் கேடாகக் கருதி அவன் தன் நண்பர்களுடன் நகைத்தும் கேலிசெய்தும் அதனை வேண்டா வெறுப்புடன் நிறைவேற்ற எண்ணினான்

ஆனால் ரோமப் பொதுமக்களை ஒருவன், ஏமாற்றி அவமதிக்க முடியுமாயினும் எதிர்த்து அவமதிக்க முடியாது என்பதை அவன் அன்று கண்டான். என்றும் ரோம் அரசியல் வாழ்வில் தெரு தூசிக் கொப்பாகப் பெருமக்கள் தேர்க்காலடியிற் கிடந்து புரண்ட பொதுமக்களுக்கு அவ்வொரு நாள் தம் ஆற்றலையும் வெற்றியையும் அளந்தறியும் நாளாயிருந்தது.

எத்தகைய வீரனும் அன்று அவர்களுக்குப் பணிந்தே தீரவேண்டும். அன்று பணிந்து, வேண்டுமாயின் அடுத்தநாள் அவர்கள் தலையில் அச்சமும் இரக்கமுமின்றி மிதிக்கலாம் முழுப்பழியும் வாங்கலாம்; ஆனால் அன்று பணிந்தே தீரவேண்டும்.