பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம்

ஒரு நாள் கழிந்த பின் அவர்களனைவரும் அஞ்சி வணங்குந் தெய்வமாயினும் என்ன? அன்ற அவர்கள் கையால் உருவாக்கப் படண்ேடியதே அன்றிவேறில்லை.

ஆனால் கோரியோலானஸ் இதை அறிந்து பொருட்படுத் தினால் தானே! வீரனாயி தான்-உலகினர் அஞ்சும் வால்ஷியரின் தலைமைப் பெருங்கோட்டையைப் பிறருதவியின்றித் தனியே நின்று வென்ற தான்- ஒப்பற்ற வீரனாகிய ஆஃபீதியஸையும் பதுங்கி ஓடும் இப்பதர்கள் முன் நின்றிரப்பதா என நினைத்தான் அவன். வணங்காமுடி மன்னனாகிய தான், வழி வழி அடிமைகளாகிய அவர்கள்முன் நின்று பசப்பு மொழி பேசவேண்டுமேயென்று நினைக்கும்போதே அவன் நாக்கு மேல்வாயிற் சென்று பதிவதாயிற்று.

போர் முழக்கத்தில் தேர்ந்த அவன் நாக்கு அன்று குழறிற்று. போரிற் கோட்டையினின்று பொழியும் அம்பு மாரிகளிடையே நின்று நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்கும் அவன் முகம் அன்று வணங்க முடியாமற் குழம்பிற்று. முன்பின் அறியாதவர்களிடம் இன்றியமையா நிலையில் பேசும் மங்கையர் போன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு உணர்ச்சியற்ற குரலில், 'உங்கள் சீட்டைக் கொடுங்கள், நான் தலைவனாக வேண்டும்,' என்றான்.

ம்

உணர்ச்சியற்ற இம்மொழிகளைக் கேட்டு வெறுப்புற்றும், அவன் வீரத்தை எண்ணி அவர்கள் அவனுக்குச் சீட்டை யளித்தனர். ஆனால், சீட்டளித்த பின் கூட்டத்திற் சென்று அவர்கள் முணுமுணுத்துக் கொண்டனர். தமது மரபுரிமையான மதிப்பை இழக்க அவர்கள் மனங்கொள்ளவில்லை. இம் மனப்பான்மையைக் குறிப்பாய் அறிந்த ஜூலியஸ் புரூட்டஸும், ஸிஸினியஸ் வெலுதஸும் அவர்கள் முன்வந்து, 'நீங்கள் கோரியோலானஸைத் தெரிந்- தெடுத்தது சரிதான். ஆனால் அவன், முன் உங்களை அவமதித்தவன், இனி அவமதிப்பதில்லை என்று மன்னிப்பாவது கேட்க வேண்டாமா?' என்றனர்.

கூட்டம் தன் ஆற்றலை வலியுறுத்த வாய்ப்பு நேர்ந்தது கண்டு எழுச்சியுடன், 'ஆம், ஆம்: மன்னிப்புக் கேட்க வேண்டும்... பொதுமக்கள் விருப்பத்தை இனி மதிப்பதாக உறுதிமொழி கூறவேண்டும், என்றது.