பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

45

அவர்கள் உடனே, 'திரிபூணர்கள் என்ற முறையில், நாங்களே அவனுக்குத் தலைமை நிலைக்குரிய சின்னங்கள் அளிக்கவேண்டும்; அப்போது உங்கள் சார்பில் இம்மன்னிப்பைக் கேட்போம்; நீங்கள் துணை நிற்க,' என்று கூறிவிட்டுப் பொது மன்றத்திற்குச் சென்றனர். கூட்டம் பின் தொடர்ந்தது.

கோரியோலானஸின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்ததெனவே நினைத்துப் பெருமக்களும் அவனும் அத்தேர்வை நிறைவேற்று வதற்கான விழாவிற்காக முன்னேற்பாடுகள் கொண்டிருந்தனர்.

செய்து

அச்சமயத்தில் தலைவனாகவிருக்கும் கோரியோலானஸ் முன் திரிபூணர் வந்து நின்றனர். அப்போது ஜூனியஸ் புரூட்டஸ் "கோரியோலானஸ்! தலைமை நிலைமைக்குரிய பெருமை உனக்கு முற்றிலும் உண்டு; ஆயினும் நீ தலைவனாகுமுன்,பொதுமக்களை அவமதிப்பதில்லை என்றும், அவர்கள் விருப்பத்திற்கு இணக்கமாக நடப்பேன் என்றும் உறுதி மொழி கூறவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்,” என்றனன்.

கோரியோலானஸ் சட்ட நுட்பங்களையும் மரபுரிமைச் சிக்கல்களையுங் கவனியாமல், அவர்களது சிறுமைத்தனமான டையீட்டைக் கண்டு, வெகுண்டு, “என் தலைமை நிலை பொதுமக்கள் கொடையன்றே இத்தனை பணிந்து மன்றாட! வேறு தகுதியின்றி அவர்களைப் புகழ்ந்து திரியும் உங்களைப் போன்ற சொத்தைகள் அல்லவா அவர்களுக்குப் பணிய ப் வேண்டும்? ரோமின் பகைவர்களை எதிர்த்து உயிர்கொடுக்கும் வீரர் மன்றாட வேண்டுவதேன்?" என்றான்.

பொதுமக்களும் அவர்கள் தலைவர்களும் பொதுப் படையாக மிகவும் சிறுமையுடையவரேயாயினும், இத்தறுவாயிற் பெருந்தீங்கு செய்யும் ஆற்றலுடையவர்கள் என்று கோரியோலானஸின் நண்பர்கள் கண்டு அவனைத் தடுத்துப் பணியவைக்க விரும்பினர்.

ஆனால் அவனது வீரநெஞ்சம், கொசுக்கடிகள் போன்ற திரிபூணர்களின் பொதுமக்களை மதியாமல் வெகுண்டெழுந்தது. அவனை அழிக்கக் காத்திருந்த அத்திரிபூணர்கள் பேரிரைச்சல் செய்து மக்களைத் தூண்டி விட்டனர். கைக்கெட்டியது