பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம்

வாய்க்கெட்டாற் போனதுபோல் கோரியோலானஸின் தலைமை நிலைத் தேர்வு நிறைவேறாது போயிற்று.

கோரியோலானஸுக்கு மட்டும் இஃது ஒரு பெருங்குறை வாகத் தோன்றவில்லை. அவன் பெருமக்களைப் பார்த்து, "இவையனைத்தும் உங்கள் ஆண்மையற்ற நிலைமையினால் வந்தன. இச்சிறுமை மிக்க நாய்களையும் இந்நாய்களின் தலைக் கோளாறுடைய தலைவர்களையும் பெருமை செய்துகொண்டு நீங்கள் பசப்புவானேன்? அவர்கள் என்ன பெருவீரர்களா? போர் என்ற கேட்டவுடன் ஆட்டுக் கூட்டம் போற் கலைந்தோடும் பேடிகள் அல்லரோ அவர்கள்? அவர்களுக்கு நீங்கள் வீண் சோறிட்டுப் பெருமை படுத்துகின்றீர்கள்” என்றான்.

இதைக்கேட்டதும் திரிபூணர்கள் கையையும் கைக்குட்டை களையும் வீசிப், 'பொதுமக்கள் பகைவன் கோரியோலானஸ் வீழ்க' என்று கூக்குரலிட்டனர்.மக்களை நோக்கி அவர்கள், 'இவன் கையில் நீங்கள் அடைந்த அவமதிப்பு என்றென்றும் அடைந்த தாகும். அவன் உங்களை நாய்க்கூட்டம் என்கிறான்; ஆட்டு மந்தை என்கிறான்; நீங்கள் மனம் வைத்தால் நாங்கள் அவன் செருக்கை அடக்கி அவன்மீது பழி வாங்குவோம்' என்று கூறி அவர்களைத் தூண்டினர்.

பெருமக்கள் இப்போது ஒன்றுஞ் செய்ய இயலாது திகைத்தனர். கடல்போல் ஆரவாரித்தெழுகின்ற பொதுமக்கள் திரள் ஒருபுறம்; தீயையும் பகையையுங் கக்கி வீறிட்டெழும் எரிமலைபோற் குமுறி முழங்கி நிற்கின்ற கோரியோலானஸ் ஒருபுறம். அவர்கள் பாவம் யாது செய்வீர்!

தலைவர் நிலையை மறத்ததுடன் அவர்கள் சீற்றந் தணிய வில்லை. கோரியோலானஸை குற்றவாளியைப் போல் ஊர் மன்றத்தில் ஆராய்ந்து தண்டிக்க விரும்பினர். கோரியோலானஸ் இதற்கு இடங்கொடாமல் மீறலானான். ஆனால், நண்பர்களும் பெருமக்களும் அவனை மிகுதியும் வேண்டிக்கொண்டு அப்பால் இழுத்துச் சென்றனர். ரோமரின் வழக்கு மன்றம் நகரின் புறத்துள்ள கொடும்பாறை ஒன்றின் பக்கம் இருந்தது. அதன் பக்கம் நோக்கிக் கோரியோலானஸைச் சூழ்ந்து கொந்தளித்துக் கொண்டு பொதுமக்கள் கூட்டம், 'வெட்டுங்கள், குத்துங்கள்,