பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

47

நகரத்தின் பகைவனை, நகரமக்கள் களையை அகற்றுங்கள்' என்று கூறியவண்ணஞ்சென்றது.

மன்றத்திலும் கோரியோலானஸ் இவ் அவமதிப்பை ஏற்க மறத்துச் சீறினான். பெருமக்களும் நண்பர்களும் அவனைப் பணியும்படி வலிந்து மன்றாடி வேண்டினர். அப்படி வேண்டியும் அவன் மொழிகள் உருக்கிய இரும்புப் பிழம்புபோல் கனன்று பாய்ந்தன. பொதுமக்களது சீற்றத்தின் முழு வன்மையும் அவன் மீது மோதியது. ஆனால் அவன் பெருவீரன் என்பதையும் அவன் எதிர்த்துவிட்டால் அவனை அடக்குதல் அரிது என்பதையும் மட்டும் நன்குணர்ந்து, திரிபூணர் அவனுக்குக் கொலைத் தீர்ப்பு அளிக்காது நாடு கடத்தல் தண்டனையே அளித்தனர்.

கோரியோலானஸ் அப்போதும் நிமிர்ந்து நின்று கொதித்துக் கொதித்து எழுங் குழம்புபோல் இதைந்தெழுங் கூட்டத்தை அசட்டையாய்ப் பார்த்து, "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்று தெரியாத அறிவிலிகளே! யார் யாரை நாடுகடத்தும் வன்மை உடையவர்கள் என்பதை உங்களுக்கு நான் காட்டவேண்டுமா? சரி, எப்படியும் நான் இல்லாமல் ரோம் வாழ்வதையும், ரோம் இன்றி நான் வாழ்வதையும் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுச் சரேலென்று நகரெல்லை கடந்து

செல்வனாயினான்.

தன் மகன் குற்றமே தன் குற்றமாதலின் அதனை வலம்னியா அறியாது, அவனை அவமதித்த அந்நன்றி கொன்ற மக்களைப் பழித்தாள். ரோம் மக்கள் - அஃதாவது ரோம் பெருமக்கள் வீரமிக்க தன் மகனை இப்பதர்கள் கையில் விட்டு அவர்கள் அவனைத் துரத்த ஏன் பார்த்துக் கொண்டு வாளா நிற்கின்றனர் என்று அவள் புலம்பினாள். கோரியோலானஸின் மனைவி 12வர்ஜீலியாவோ யாரையுங் குறை சொல்லாமல் தன் ஊழ்வினையையே நொந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கி நின்றாள். கோரியோலானஸ் வெளியே செல்கிறான் என்று கேட்டதுமே அவ்விருவருந்தங் குலமதிப்பை மறந்து, தலைவிரி கோலமாய் அழுது கொண்டு அவனைப் பின்பற்றினர். அவன் உணர்ச்சியற்ற குரலில், 'நீங்கள் ரோம் மாதர்களாதலின், ரோமுக்கு வெளியே என்பின் வரல் தகாது' என்றான். அது கேட்டு அவர்கள் தம் விருப்பத்திற்கெதிராகப் பின்னடைந்து நிற்க வேண்டியதாயிற்று.