பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம்

அவன் வெளியேறுவது கண்டு, அவனுடன் நின்று போர் செய்த காமினியஸ் கூட அழுது, 'இஃதென்ன முறையோ, நாயும் பேயுங்கூடச் சட்டை பண்ணாத இத்துரும்புகள் பேரல் ரோமின் தனிப்பெரு வீரனை வெளியேற்றுவதா' என்று நினைத்து மனம் பதைத்தவனாய்ப் பின் தொடர்ந்து வந்து கோரியோலானஸ் கண்மறையும் வரை வாயிலில் நின்றான்.

3. வெஞ்சினமும் பழியார்வமும்

கோரியோலானஸ் மனத்தில் இப்போது ஒரே ஓரெண்ணம் பழி! பழிக்குப் பழி! வீரத்திற்கு விலையின்றிக் கோழைத்தனத்துக்கு விலை தரும் ரோமிற்கு - உண்மைக்கு விலையின்றிப் பசப்பு மொழிகளுக்கும் பொய்ம்மைக்கும் விலை தரும் ரோமிற்கு நகரைப் பாதுகாக்கும் ஆற்றலின்றி நகரத்தின் செல்வத்திற் பங்குகொள்ள மட்டும் வாய் பிளந்துகொண்டு நிற்கும் பேடிக்கூட்டத்தையுடைய இந்த ரோமிற்கு- ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று அவன் மனம் துடித்தது.

பேடிக களான இந்நண்பர்களைவிட, நாட்டு மக்களைவிட, வீரசூரர்களான வால்ஷியரும், அவர்கள் ஒப்பற்ற தலைவனும் போர்ச்சிங்கமுமான ஆஃபீதியஸும் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று அவன் எண்ணினான். எண்ணவே குறிப்பிட்ட நோக்கமின்றி நடந்த அவன் கால்கள் அவனை அறியாமலே அவர்கள் பக்கம் திரும்பின. ரோம் மறுத்த தன் வீரத்தின் மதிப்பை அவர்கள் பக்கம் போயிருந்து காட்டுவதே பழிக்குப் பழி வாங்க நல்ல வழி என்று அவனுக்கு அப்போது தோன்றியது.

பல ஆண்டுகளாக இத்தாலி முழுமையும் நடுங்கவைத்த புறங்கொடாவீரர்களாகிய வால்ஷியரும் அவர்கள் தலைவனும், தாம் தம் நாடிழந்து பட்ட அவமதிப்பை ஓரளவு போக்கி, ரோமரிடமிருந்து கோரியோலியை மீட்டு ரோமையும் எதிர்த்தழித்து விட வேண்டுமென்று சீறி நின்று ஏற்பாடு செய்யும் நேரம் அது. அவர்கள் அண்மைவரை ரோமை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை. தம் பெயர் கேட்டவுடனேயே அஞ்சும் கூட்டமென்றே இதுவரை அவர்கள் ரோமரை மதித்திருந்தனர். ‘ஆனால், இன்று எங்கிருந்தோ இக்கோரியோலானாஸ் வந்து தோன்றினான். நமது விடுதலைக்கு நமனாகவும் நம் வீரத்துக்

66