பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

49

கொரு களையாகவும்” என்று அவர்கள் நொந்துகொண்டனர். ஆஃபீதியஸோ, ஒன்று ரோமை அழித்து அக்கோரியோலானஸை வெல்வது, அது முடியாவிடின் அவன் கையாலேனும் மாள்வது எனத் தீர்மானித்து விட்டான். பகைவனாயினும் அவனை ஒத்த வீரர் இம்மனித உலகில் இல்லை என்று அவன் மனம் கூறிற்று. அவனை வெல்வது கூடாதாய் விடினும், அவன் கைப்பட்டு மாள்வதுகூடத் தனக்குப் பெருமையே என்று நினைத்தான் அவன். கோரியோலானஸ் மட்டும் ரோமனாயிராமல் வால்ஷியனாயிருந்தால்! ஆ! அப்போது தன் நாடு எத்தகைய இறும்பூது எய்தும் என்று எண்ணும்போதே அவனை அறியாமல் அவன் கண்களில் நீர் வடிந்தது. “ஆ! பிறந்தால் அந்தக் கோரியோலானஸாகப் பிறக்கவேண்டும்” என்று அவன் வாய்விட்டுக் கூறினான்.

அந்நேரத்தில் அவன் முன் காவற்காரன் ஒருவன் வந்து, ஐயனே! யாரோ ஒருவன் முக்காடிட்டு மூடிக்கொண்டு நகர் வாயிலண்டை வந்து நின்று துள்ளஸ் ஆஃபீதியஸைப் பார்க்க வேண்டும் என்கின்றான்; ரோமன் குரல் மாதிரி இருக்கின்றது; ஆனால், நாங்கள் உறுக்கியும் போகமாட்டேன் என்கின்றான்; தள்ளியும் போகமாட்டேன் என்கிறான்” என்றான்.

66

L

L

அரை நினைவுடனேயே, 'இவனை உள்ளே அழை' என்று கூறிவிட்டு ஆஃபீதியஸ் பழையபடி முன்னும் பின்னும் நடந்து, 'ஆ! கோரியோலானஸ்! நீ ஏன் ரோமனாகப் பிறந்தாய்? அதைச் சொல்வானேன்? ஏ! ஆஃபீதியஸ், நீ ஏன் கோரியோலானஸ் பிறந்த உலகில் பிறக்கவேண்டும்? உலகில் ஒரு கோரியோலானஸ் தானே இருக்கமுடியும் என்று உனக்கு ஏன் தெரியாமற் போயிற்று?" என்றான்.

அந்நேரம் காவற்காரனுடன் முக்காடிட்ட அவ்வீரன் வந்து நின்றான். அவனைக் கவனியாது ஆஃபீதியஸ் பின்னும் ‘ஆ! கோரியோலானஸ்! கோரியோலானஸ்! நீ ஏன் எனக்கெதிராய் நிற்கவேண்டும்? நீயும் நானும் மட்டும் சேர்ந்தால், ஆஃபீதியஸும் கோரியோலானஸும் மட்டும் சேர்ந்தால் இந்த ஓர் உலகமன்று, ஈரேழுலகமும் ஒரு கை பார்த்து விடுவோமே' என்றான்.