பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம்

அப்போது முன் நின்ற முக்காடிட்ட வீரன், “ஆம்; அப்படிப் பார்த்துவிடத் தான் நானும் வந்திருக்கின்றேன்” என்றான்.

'தன் மனதில் வைத்து வாய்விட்டுக் கூறிய எண்ணங்களைக் கேட்டு விடைகூறத் துணிந்தவன் எவன்' எனச் சினந்து அப்பக்கம் நோக்கினான் ஆஃபீதியஸ்.

உடன் தானே கோரியோலானஸ்.

முக்காட்டை நீக்கி நின்றான்

இது கனவா, நனவா! கோரியோலானஸாவது! இங்கு வரவாவது? இது வெறும் உருவெளித் தோற்றமாகவேயிருக்க வேண்டும்!' என்று நினைத்தான் ஆஃபீதியஸ்.

அவன் உடல் வெவெலத்துத் துடித்தது. அவன் நாக்குப் பேசமுடியாது மரத்தது. கோரியோலரானஸையே உறுத்து இமையாற் பார்த்துக்கொண்டு வியப்பே உருவெடுத்து வந்ததுபோல் நின்றான்.

அப்போது கோரியோலானஸ், ‘ஆஃபீதியஸ்! என்னை நீயும் வால்ஷியரும் எமனென வெறுப்பீர்கள் என்று அறிவேன். ஆனால், இன்று நான் நீங்கள் வெறுக்கும் ரோமனாகிய கோரியோலானஸாக வரவில்லை. ரோமர் வெறுத்துத் தள்ளிய, ரோமின் பகைவனாய கோரியோலானஸாகவே வந்துள்ளேன்' என்றான்.

'கோரியோலானஸ்! ரோமின் பகைவன்! இன்னும் என்னென்ன வியத்தகு செய்திகளெல்லாம் உலகில் நிகழப் போகின்றனவோ!”

கோரியோலானஸ்; 'தாய் நாடே என்னைக் கைவிட்டபின் எனக்கு வாழ்க்கையில் பற்றில்லையாயினும், நான் அப்பழிக்குப் பழி வாங்கும் எண்ணமுடையேன்; அதுவும் தாய்நாட்டின் மீது! அதன் பகைவர்களாகிய உங்களுக்கு, என்னுடன் பொருத இளஞ் சிங்கங்களாகிய உங்களுக்கு, அப்பழி உதவுமாயின், என்னையும் அப்பழியையுங் கருவியாகப் பயன் படுத்திக் கொள்க’.

முதலில் கோரியோலானஸைக் கண்டதும் ‘பகைவன் உள் வந்து விட்டானே! என்ன செய்ய வந்தானோ!' என்று நினைத்துப் பரபரப்புடன் வந்து சூழ்ந்து வாள்களை உருவிக் கொண்டு தம்