பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

51

தலைவனைக் காத்து நின்றனர் வீரர். தலைவன் கையும் வாளை உருவவே முனைந்தது.

ஆனால், கோரியோலானஸ் முகத்தில் தென்பட்ட புயலொத்த சீற்றம், அவனது மழை முழக்கொத்த உருக்கமான வேண்டுகோள். அவனுடைய வெறுப்பும் துணிவும் கலந்த தோற்றம் ஆகிய இவற்றைக் கண்டதே, வீரப்பாலுடன் பெருந்தன்மையையுங் கலந்துண்டவனாகிய ஆஃபீதியஸ், தன் பகைமையனைத்தையும் மறந்து, மடைதிறந்த வெள்ளம்போல் தாவிச் சென்று கோரியோலானஸைத் தழுவிக்கொண்டு, 'ஆ! என் ஒப்பற்ற வீரசிங்கம்! ஆ! என் கோரியோலானஸ்! உன்னை எதிரியாகப் பெற்றதையே ஒரு பெருமையாகக் கொண்டேன்; உன்னை இனி என் உடன்பிறப்பாகக் கொண்டு மகிழ்வேன்' என்றான்.

பின் அவன் வால்ஷியர் பக்கந் திரும்பி, 'கோரியோலானஸ் போன்ற வீரர் பிறந்ததாலன்றோ அந்த ரோம் இவ்வளவு மேன்மையுற்றது. அவன் நம்மை அடைந்தது, நம் நல்வினைப் பயன், எதிரியாய் நின்று வால்ஷியர் வீரத்தைக் கண்ட அவனுக்கு யாம் வீரர்கேயுரிய அரிய நட்புணர்ச்சியையும் உடையோம் என்பதை இனிக் காட்டுவோம்' என்றான்.

அவர்களும் அதனை ஏற்று, “கோரியோலானஸ் வாழ்க; ஆஃபீதியஸ் வாழ்க!" என்ற முழங்கினர்.

ரோம் ஞாயிறும் வால்ஷிய ஞாயிறும் அன்று வால்ஷிய வானத்திலேயே ஒருங்கே எழுந்து ஒளி வீசின.

ரோம் மீது படையெடுக்கும் முயற்சி, முன்னிலும் விரைவாய், முன்னிலும் பன்மடங்கு துணிவுடனும் முன்னிலும் பன்மடங்கு முனைந்த எழுச்சியுடனும் நடைபெறலாயிற்று.

4. கும்பலைக் கெடுத்த கோவிந்தர்கள்

கோரியோலானஸ் போனபின் திரிபூணர்கள் தலைதெறிக்க வெற்றி முழக்கம் முழங்கினர். அன்றுதான் அவர்கள் தங்கள் முழு வலிமையையும் உணர்ந்தவர்களாகக் கொக்கரித்தனர். ‘பெருமக்கள் அன்று தமக்கு முன்தலை வணங்கினர். அவர்கள் ஒப்பற்ற தலைவன். அவர்கள் அனைவர் பெருமைகளும் ஒருங்கே திரண்டு வந்தவன் போன்ற கோரியோலானஸையே தாங்கள்