பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(52) ||__

அப்பாத்துரையம்

துரத்தியோட்டி விட்டோம்' என்ற நினைவில் அவர்கள் தலைகால் தெரியாமற் குதித்தனர்.

அப்போது வால்ஷியர் ரோம் மீது படையெடுக்க ஏற்பாடு செய்கின்றனர் என்று தூதன் ஒருவன் வந்து கூறினான்.

திரிபூணர்கள் அவன் தம்மைக் கேலி செய்கின்றான் என்று கருதிய தோடன்றி, அதற்காக அவனை நையப்புடைத்துச் சிறையிலும் இட்டனர்.

அதன்பின் தூதன் இன்னொருவன் வந்து, 'வால்ஷியர் படை புறப்பட்டு விட்டது; கோரியோலியை அவர்கள் கைப்பற்றிவிட்டனர்' என்றான்.

அப்போதும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. ‘என்ன கட்டுக்கதை! ரோமர்களிடமிருந்து கோரியோலியை மீட்க எவனால் முடியும்' என்றார்கள். (கோரியோலியை வென்ற வீரனையே நாங்கள் வென்றவர்- களாயிற்றே என்ற அவர்கள் நினைத்தார்கள் போலும்)

தலைவனாயிருந்து

அப்போது கோரியோலியில் தோற்றோடி வந்த தீதஸ் லார்ஷியஸ் நேராக அலங்கோல உருவுடன் வந்து, 'அறிவிலிகளே! இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நகருக்கு இடையூறு வந்துவிட்டது! கோரியோலி வீழ்ந்துவிட்டது! இங்கும் படை வருகின்றது!' என்றான்.

அவன் பின் காமினியஸ் வந்து, "வீரர்களே! நீங்கள் செய்த வீரச் செய்கையின் பயனை ன்று அடையுங்கள்; வால்ஷியர் முன் இனி என்ன செய்யப் போகிறீர்கள்? இளஞ்சிங்கத்தை வெறுத்தொதுக்கிய இளம் புலிகளே! இனி உங்கள் கெட்டிக் காரத்தனத்தைப் பார்ப்போம்' என்று சினந்து கூறினான்.

பெருமக்களும் இப்போதும் துணிகரமாக அப்பொது மக்கள் தலைவர்களைக் கண்டிக்கலாயினா. ‘இப்பொறுப்பற்ற கும்பல்கள் சொற்கேட்டு, ரோமின் விலைமதிக்க முடியாத மாணிக்கத்தை இழந்து விட்டோமே' என்று அவர்கள் வருந்தினர்.

அப்போது பின்னும் வேறு தூதன் ஒருவன் வந்து, ‘ஐயன்மீர் வால்ஷியரின் கிளர்ச்சிக்கும் முழக்கத்துக்கும் எல்லையில்லை.