பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

53

அவர்கள் முகத்தில் வெற்றி வெறியும் வீம்பு நடையும் தாண்டவமாடுகின்றன. அவர்களிடையே கோரியோலானஸே நேரில் சென்றிருந்து கொண்டு ரோமை எதிர்க்க உதவுவதாகக் கூடக் கேள்வி' என்றான்.

கோரியோலானஸ்

என்ற பெயரைக் கேட்டதே

பெருமக்கள் இடியேறுண்ட நாகம் போற் செயலிழந்தனர்.

பொதுமக்களிடையே இச்செய்தி மின்பாய்வது போற் பாய்ந்து பரவிற்று. அவர்களுட் பலரும், ‘அந்தோ! நாம் செய்த பிழை' என்றிரங்கினர். ‘வீரத்தைப் பழித்த நமக்கு இது வேண்டும்" என்றனர் சிலர். 'வாய்வீரர் சொற்கேட்டு வாள்வீரனை இழந்தோம்' என்றனர் மற்றுஞ்சிலர்.

இன்னுஞ் சிலர், 'எமக்குக் கெடுமதி கூறிய அத்திரி பூணர்கள் மீது பழி வாங்கவோம்' என்று எழுந்தனர். ஆனால், அத்திரிபூணர்கள் இப்போது காற்று எதிர்த் தடிக்கிறதென்று கண்டு, மறைவிடஞ் சென்று பதுங்கிக் கொண்டார்கள்.

ஆயினும், வெள்ளம் அணை கடந்துவிட்டதே! இனி என் செய்வது? இனி, வந்த வினைக்கு இறை இறுத்துத்தானே ஆகவேண்டும்! பெருமக்கள் அங்குமிங்கும் ஓடி வீரர்களைத் திரட்டிக் கோட்டை மதிலைக்காக்கத் துரத்தியடித்தனர். படையின் தலைவர்களும் வாயிலில் வந்து கூடினர்.

கோரியோலானஸுடன் போர் செய்ய எவர் தாம் முன்வருவர்! ஆகவே, எப்படியும் கோரியோலானஸின் சீற்றத்தை நன்மொழிகளால் தணித்து அவனை அவனது சூளினின்றும் விலக்கவேண்டுமென்று யாவரும் ஒரே மனதாகத் தீர்மானித் தனர். இதற்காகத் திரிபூணர்கள் அவன அவமதித்துத் துரத்திய திரிபூணர்கள் - பெயராலேயே ஒருவனை அனுப்புவதென்று எண்ணினார். கோரியோலானஸுடன் முன் படைத் தலைமை தாங்கிப் போருக்குச் சென்ற காமினியஸே அதற்குத் தக்கவன் என்ற எல்லாருந் தேர்ந்தெடுத்தனர்.

காமினியஸ் கோரியோலானஸை ஒத்த வீரன் அல்லனாயினும் ரோமப் படையை அவனுக்கும் மேலாக நின்று தலைமை தாங்கி நடத்தியவன். ஆனால், படை உயர்வை ஒருபுறம்