பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம்

(54) || எறிந்துவிட்டுக் கால்நடையாய் நடந்து வந்து வால்ஷியரிடம் பணிந்து, 'கோரியோலானஸைக் காணவேண்டும்' என்றான்.

முதலில் வால்ஷியர், 'அதற்கிணங்க மாட்டோம்' என்றனர். ஆனால், ஆஃபீதியஸ் கோரியோலானஸுக்கு இடங்கொடுத்து விட்டது பற்றி உள்ளூரக் கழிவிரக்கங்கொள்ளத் தொடங்கி யிருந்தான். கோரியோலானஸ் வந்தது முதல் வால்ஷியர் அனைவருந் தன்னை விட்டுவிட்டு அவனையே தெய்வமாகக் கொண்டாடியதனால், தன் புகழ், ஞாயிறு தோன்றியபின் திங்களொளி மழுங்குவதுபோல் மழுங்கக் கண்டான். ஆகவே, ரோமருக்கு இடங்கொடுப்பதன் மூலம் கோரியோலானஸ் திரும்பிப் போகலாகும் என உய்த்துணர்ந்து அவன் அவர்களுக்கு உள்ளே செல்ல இணக்கமளித்தான்.

ஆனால், 'பழி! ரோமின்மீது பழி!' எனத் துடித்து நிற்கும் கோரியோலானஸ் காமினியஸ் வந்ததைக் கண்டானில்லை. அவன் காதுகள் காமினியஸ் மொழிகளை ஏற்க மறுத்தன. ஆயினும், தன்முன் மண்டியிட்டு அவன் பணிந்தபோது பழைய நட்பு நினைவு கனிந்தெழலாயிற்று. அவன் காமினியஸை கையாலெடுத்து நிறுத்தித் தழுவிக்கொண்டு, 'நண்பா! மன்னிக்கவேண்டும்; பழி என் கண்களை மறைக்கின்றது; இப்போது செல்க! ரோம் அழிந்தபின்புதான் நட்பின் ஒளி என் கண்களில் வீசும்' என்று கூறி அனுப்பினான்.

அதன்பின் ரோமர், முன் பொதுமக்களை வசப்படுத்திய சொல்லாளனாகிய மெனெனியஸை அவனிடம் அனுப்பிப் பார்த்தனர். அதனாலும் பயனில்லை. ரோம் மக்கள் மனமுடைந்தனர். வீரர்களோ, "கோரியோலானஸ் வருவதாயின் நாங்கள் சண்டை செய்யமாட்டோம்; அவனை எதிர்த்துத் துரத்திய திரிபூணர்ளும் அவர்கள் கும்பல்களுமே போய்ச் சண்டை செய்யட்டும்” என்று கூறிவிட்டு விலகி நின்றனர்.

திரிபூணர் பாவம்! இப்போதுயாது செய்வீர்! மறைந்துகிடந்த இடம் வரை தம் வினையின் பயன் தம்மை வந்து தாக்குகின்றது; தமது பிழைய இனித் தாமேதான் சரிசெய்ய முயலவேண்டும் என்று அவர்கள் கண்டனர். கண்டு, தமது பகைமை, தமதுவெற்றிச் செருக்கு ஆகிய அனைத்தையுஞ் சுருட்டி ஒதுக்கி வைத்துவிட்டுக், குனிந்த தலையொடும் குழைந்த உருவொடும் கோரியோலானஸின்