பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

55

வீடு சென்று, அங்குத் திரிபுர எழுச்சிக் காலத்துக் கடவுளர் வரவுக்குக் காத்திருந்த மலைமகளும் திருமகளும் போன்று கவலையே வடிவாக வீற்றிருக்கும் வலம்னியாவையும் வர்ஜீலியாவையுங் கண்டு, அவர்கள் காலடியில் வீழ்ந்து, தமது பொறுக் கொணாப் பிழையைப் பொறுக்க வேண்டுமென்றும், தமக்காக அன்றேனும் ரோம் அன்னைக்காகவேனும் மனமிரங்கிக் கோரியோலானஸின் சீற்றத்தைத் தணித்து அவன் பகைமை- யினின்று தம்மையும் ரோமையும் பாதுகாத்தல் வேண்டும் என்றும் அழுது மன்றாடினர்.

வர்ஜீலியா தன் கணவனைத் துரத்திய காதகர்ளைக் கண்களால் பார்க்கக்கூடப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆனால், நாட்டுப்பற்றும் வீரமுங் கொண் வலம்னியா, தன் மகன் மீதுள்ள பற்றையும் அவன் மீது பழி சுமத்திய அம்மக்களின் மீதுள்ள சீற்றத்தையும் ஒருவாறடக்கிக் கொண்டு அவர்களிடம், 'என்னால் என்ன ஆகும்? கெடுதல் செய்யும் ஆற்றலுள்ள நீங்களே கையற்றபோது நான் செய்வதென்ன?' என்றாள்.

திரிபூணர், 'அன்னையே உங்களால் இப்போது ஆகாத காரியமன்று நாங்கள் கேட்பது; குற்றம் செய்த எங்கள் சொல் ஏறாவிடினும், நீங்கள் எங்களுக்காகப் பரிந்து கேட்டால் கோரியோலானஸ் கட்டாயம் மனமிரங்குவான்; பெண்கள் அழ, அதிலும் மனைவியும் தாயும் அழ அவன் பார்த்திருக்க மாட்டான்' என்றனர்.

வலம்னியா சரி என ஏற்றுக்கொண்டு வர்ஜீலியாவின் கண்களைத் துடைத்து முடிதிருத்தி அவளையும் உடன்கொண்டு புறப்பட்டாள். அவர்களைப் பின்பற்றி ரோம் நகரப் பெண்கள் அனைவரும் - அந்தணர் வீட்டுப் பெண்களும், வீரர் பெண்களும், வணிகர் பெண்களும், வேளாளர் பெண்களும், ஏழைப் பொதுமக்கள் பெண்டிருமாக எல்லாரும்-ஒருங்குகூட அணிவகுத்துச் சென்றனர். நகர மூதாட்டிகள் இருமருங்கிலும் வரிசையாக அவர்களைத் துணைதாங்கிச் சென்றனர்.

கரிய உடை உடுத்துத் கலங்க அழுத கண்களோடு தலைவிரி கோலமாய் வந்த அப்பெண்கள் ஊர்வலத்தை நோக்கி எதிரிகளாகிய வால்ஷியர் முதற்கொண்டு வீரமெல்லாம் இழந்து