பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

57

அவன் அவளையும் குழந்தையையும் எடுத்து அப்பால் நிறுத்தி, 'நீங்கள் போங்கள்' என்றான்.

பெற்ற பிள்ளையையும் கண்டு கரையாத அவன் சீற்றத்தைக் கண்டு அவனைப் பெற்ற வீரத்தாயாகிய வலம்னியாகூட அஞ்சினான். ஆயினும் தன் கடமையை எண்ணி முன்வந்து அவனை நோக்கிக் 'கோரியோலானஸ், பெண்டாட்டியையும் பிள்ளையையும் கண்டிரங்காத உன் முன் உன்னைப் பெற்ற தாயாகிய நானே வந்து நின்று மன்றாடுகிறேன்' என்று கூறி மகனென்றும் பாராமல், அவனை வணங்கப் போனாள்.

தாய், தன்னை ஈன்றெடுத்த தாயா தன்னை வணங்குவது என்று துடிதுடித்த உள்ளத்தினனாய்க் கோரியோலானஸ் அணை மீறிய வெள்ளம் போல் முன் சென்று அவள் கால்களில் வீழ்ந்து, ‘அன்னையே! எல்லாம் அறிந்த தாங்களும் இப்பணியில் இறங்கி என்னை இருதலைப் பொறியிலிடுவானேன்! எனது தன் மதிப்பு என் பழியில் அடங்கிக்கிடக்கிறது. அதிலிருந்து என்னை விலக்க நீங்கள் முயல்வானேன்! இதற்காகப் பகைவர் இடம் என்றும் பாராமல் இவ்வளவு தொலை தாங்களும் இத்தனை மெல்லியலாரும் கால்நோக நடந்து வந்து மன்றாடும்படி நோந்தது என் நெஞ்சைப் பிளக்கின்றது' என்று கூறி அவள் கால்களைப் பற்றித் தழுவினான்.

அவள் அவன் தலைமீது கைவைத்து வாழ்த்தி, “நீ ஒரு போர்வீரன், உன்னைப் போர்வீரனாக்கியதும், தன் மதிப்புடைய வனாக்கியதும் நான். என்முன் உன் தன்மதிப்பு ஒரு தடையாகாது. மேலும் நான் உனக்கெப்படி அன்னையோ அப்படியே ரோமும் உனக்கு அன்னையாவாள். அவள் மீது போர் தொடுப்பது என்மீது போர் தொடுப்பது போலவேயாம். ஆதலால் அவ்வெண்ணத்தைவிடு' என்றாள்.

கோரியோலானஸ், 'தாயே! தாங்கள் கேட்பது இன்னது என்று தாங்கள் அறியீர்கள். தாங்கள் கேட்டபின் நான் மறுக்கும் பொருள் யாதுமில்லை. உயிரையே கேட்பினும் நான் மறுக்கமாட்டேன். இந்தக் கணத்திலேயே கொடுப்பேன். ஆனால் இதில் என் தன் மதிப்பு, நட்பு, வாக்குறுதி ஆகிய யாவும் அடங்கிக் கிடக்கின்றன. இவ்வொரு வகையில் தங்கள் ஆணையை மறுக்க