பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம்

நேர்தமைக்கும் தாங்கள் வந்த காரியம் நிறைவேறாமல் மீண்டேக நேர்ந்தமைக்கும் வருந்துகிறேன்’.

வலம்னியா, 'சரி, உன் தன்மதிப்பையும் வாக்குறுதியையும் நீயே வைத்துக்கொள்' என்று சினந்து கூறிவிட்டுச் சரேலென்று திரும்பி வர்ஜீலியாவைப் பார்த்து, 'வர்ஜீலியா, இனி அவன் என் பிள்ளையுமல்லன் உன் கணவனுமல்லன்; கயஸ்! நீயும் இனி அவனைத் தந்தை என அழைக்க வேண்டாம். அவனுக்கு ரோம் அன்னையின் மதிப்பைவிட ஒரு மதிப்பு இப்போது ஏற்பட்டு விட்டது. ரோம் அன்னையின் பாலுடன் கலந்துண்டவீரத்திலும் மேலான வீரமொன்று அவனுக்கு இப்போது வந்திருக்கிறது.நாம் இனி அவன் பகைவர்களானதனால் பகைவர்களாகவே போவோம்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள்.

கோரியோலானஸ் மனத்தில் இம்மொழிகள் சுறுக்கெனத் தைத்தன. அவன் சட்டென அவள் முன்சென்று நின்று அவளைத் தடுத்தான். வர்ஜீலியாவும் கயஸும் விம்மி விம்மி அழுதனர். ஆனால் அவள், ‘நீ ஏன் அழவேண்டும் வர்ஜீ? இனி உன் னி கண்ணீரை அவன் கவனியான்; தாய் தந்தையார் இருந்தும், தாய் தந்தையற்றவன் போலக் கரைந்தழும் இக்கைதையேந்தலைக் கூடக் கவனியாத இக் கல்நெஞ்சனை நினைந்தழுவதை விடு; நாம் செல்வோம்' என்றாள்.

அவள் சொல் ஒவ்வொன்றும் பழுக்கக் காய்ந்த வேல்கள்போல் அவன் நெஞ்சில் பாய்ந்தன. அவன் “அம்மா! என்மீது ஏன் இத்தனை பழிகளைச் சுமத்த வேண்டும்? நான் வேறென்ன செய்யமுடியும்? ஒரு கெடுதலும் செய்யாத என்னிடம் இப்படியெல்லாம் முகம் திருப்பிக்கொண்டு போவானேன்?” என்றான்.

அவன் மனம் திரும்புவது கண்டு வலம்னியா, “எங்கள் நிலைமையை நீ நினைத்துப் பார்த்தாயா? நீ எனக்குப் பிள்ளை! இதோ இக்கற்பரசிக்கு நீ கணவன்! எல்லா மாதர்களும் ரோமின் வெற்றிக்கும் உறவினர் வெற்றிக்கும் வணக்கம் செய்யும்போது நாங்கள் இருவர் மட்டும் ரோமின் வெற்றிக்கும் வணக்கம் செய்யமுடியாமல், உனது வெற்றிக்கும் வணக்கம் செய்ய முடியாமல் தவிப்பதா? நீ ஒரு வீரனாயிருந்து தாயையும் மனைவியையும் தவிக்கவிடலாமா? இதுவரை ரோமுக்காக உயிர்