பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம்

60

அன்னையே! என் மனித உணர்ச்சியை, ஏன் பெருமையைக் குலைத்த ரோம், உங்களை அனுப்பியது ஏன் என்று இப்போது தெரிந்தது. நீங்கள் ரோமின் உயிருக்கு மன்றாட வரவில்லை. ஒரு ரோமன் உயிருக்கு-என் உயிருக்கு-மன்றாட வந்தீர்கள். அவ்வுயிர்க்கு இனி விலையில்லை. ஏனெனில் அதனினும் மிக்க மானத்தையே நீங்கள் விலைகொண்டு செல்கிறீர்கள். உயிரையும், உயிரினும் இனிய பழியையும் அப்பழியினும் மிக்கதான என் நண்பர் வால்ஷியருக்களித்த வாக்குறுதியின் நிலையையும் நீங்கள் கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் செல்க!

“உங்கள் பெருமைக்கும், உங்கள் குடிப்பெருமைக்கும், உங்கள் நாட்டுப் பெருமைக்கும் என் உயிர் இரையாவதாக என்றான்.

அவன் சொற்களின் பொருள் அவளுக்கோ ஏழை வர்ஜீலியாவிற்கோ விளங்கவில்லை. ஆனால், தம் வேண்டு கோளை அவன் ஏற்றான் என்று மட்டும் அவர்கள் கண்டனர்.

ரோமின் பக்கம் நோக்கி அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, 'கோரியோலனஸ்! உன் பெருந்தன்மை கண்டு ரோமின் மனம் குளிர்க' என்று கூறி அந்நற்செய்தியை ரோம் மக்களுக்கு அறிவிக்க மீண்டேகினர்.

6. முடிவு

அவர்கள் செல்வத்தைத் தன் உயிர் செல்வதாக எண்ணிப் பார்த்து நின்றான் கோரியோலானஸ். வால்ஷியாரும் செய்வ தின்னதெனத் தெரியாது திகைத்து நின்றனர். அவன் சொற்களை ஒருவராயினும் முழுமையாக உணரவில்லையாயினும், தாய் வந்த காரியம் வெற்றியாயிற்று என்று மட்டும் கண்டனர்.

உயிரைப் பறிகொடுத்து அதனை மீட்டுக்கொண்டு வரப் போனவர்களுக்காகக் காத்திருந்தவர்கள் போல் கவலையுற்றேங்கிய ரோம் மக்கள், தம் மாதர் அனைவரும் வலம்னியாவின் தலைமையில் மிள்வதைக் கண்டனர். அவள் முகத்தில் வீரர் களை மிளிர்ந்தது. வர்ஜீலியாவிடம் அக்களையில்லையாயினும் அவள் அழுகை ஓய்ந்து அமைந்த தோற்றத் துடனிருந்தாள். சிறுவன் கயஸை அவள் கையிலெடுத்த அணைத்து முத்தமிட்டுக் கொண்டே வருகிறாள்.