பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

61

அவர்கள் நடையிலிருந்தே மக்கள், வெற்றி தமதென உணர்ந்தனர். கிட்ட வந்ததும் வலம்னியா, 'ரோம் வாழ்க! கோரியோலானஸ் வாழ்க!' என்றாள். பெண்கள் அனைவரும் தொடர்ந்து, 'ரோம் வாழ்க! ரோம் வாழ்க! கோரியோலானஸ் வாழ்க!' என்று ஆரவாரித்தனர்.

இதன் எதிரொலி போலக் கோட்டை முழுமையுமே, உயிர் வந்தது போல், ‘ரோம் வாழ்க! கோரியோலானஸ் வாழ்க!' என்று ஆரவாரித்திரைந்தது.

வால்ஷியர் படைவீடு மட்டும் ஒளியிழந்தது.

கோரியோலானஸ் வீரமும் அவன் உயிரும் அவன் உடலை விட்டு விடை கொண்டு சென்றுவிட்டன என்று தோன்றிற்று.

சிங்கம் போன்ற இறுமாப்புடைய அவன் உருவம் சிறியதொரு முயலென ஒடுங்கி நடுங்கிற்று.

அவன் தன் வாளை உறையிலிட்டு விட்டு நேராக ஆஃபீதியஸ் இருக்கையை அணுகி, அவனிடம் அவ்வாளை உறையுடன் கொடுத்துத் 'தாய் நாட்டின் பகைவன், தன் உறவினர் நாட்டின் துணைவன் ஆவனோ? நான் உங்களுக்கும் பகைவனே! என் உயிரைக் கொள்க' என்றான்.

அவன் வீரனென்று தெரிந்ததும் அவன் மீதுள்ள பொறாமை ஒரு புறம்; அவனால் அடைந்த ஏமாற்றம் ஒருபுறம் ஆக நின்று ஆஃபீதியஸையும் அவன் வீரராகிய வால்ஷியரையும் மனித உணர்ச்சியற்றவராகச் செய்து விட்டது.

படையிழந்து பகையுணர்ச்சியும் இழந்த அவனை அவர்கள் அவன் வாய்மொழிக்கிணங்கவே, 'தாய்நாட்டுக்குப் பகைவன், அண்டியவர்க்கும் பகைவன், மனித வகுப்புக்கே ஒரு கோடாரிக் காம்பு' எனக் கூவிக்கொண்டு அவனைச் சூழ்ந்து வாளாலும் ஈட்டியாலும் கட்டையாலும் தாக்கி வெட்டியும் குத்தியும் எறிந்தும் அடித்தும் அவனைக் கொன்று அவனுடலைச் சிதைத்தனர்.

பின் அவர்கள் அவன் குடலை ஈட்டியில் குத்திக் கொடியாகப் பிடித்துக்கொண்டு, ரோம் மீது தங்களுக்குள்ள சீற்றமனைத்தையும் அவன் மீதே காட்டி, ரோம் மக்கள் கண்காண