பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம்

ரோம் நகர்க் கோட்டையைச் சுற்றிச் சென்று, 'கோரியோலானஸ் வீழ்க! வால்ஷியர் பகைவன் வீழ்க; வஞ்சக ரோமன் வீழ்க!' என்று கதறினர்.

அவன் முடிவறிந்த ரோமர், தீ மிதித்தவர் போலத் துடித்தார். வர்ஜீலியா அத்துணுக்குறு செய்தி காதில் விழாமுன் ஒரே அலறாய் அலறி வீழ்ந்து மாண்டாள்.

வலம்னியாவும், தன் மகனை தன் வீர மகனை நன்றிகெட்ட அந்நகருக்கே பலிகொடுத்த துயர் தாளாது வாளால் தன்னை மாய்த்துக் கொண்டாள்.

வாழ்வு நாளில் பகைத்துக் கொண்டே கோரியோலானஸை இழந்து தாழ்வடைந்து, நாணிழந்த நங்கைபோல் நலனிழந்து மாழ்கியது ரோம் நகரம்.

அடிக்குறிப்புகள்

1.

Caiws Marciws

2.

Vulumnia

3.

Tarquin

4.

Menenius Agrippa

5.

Volsciaus

6.

Tullus Aufidus

7.

Consuls

8.

Cominus

9.

Titus Lartius

10.

Junius Brutus

11.

Sicinius Velutus

12.

Virgilia