பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. அந்தோணியும் கிளயோப்பாத்ராவும்

Antonio and Cleopatra

கதை உறுப்பினர்

ஆடவர்:

1.அந்தோணியோ: ரோம வீரன், ஒப்பற்ற படைத்தலைவன். ஆசிய நாடுகளையும் எகிப்தையும் வென்றடக்கியவன் கிளியோப்பாத்ராவின் ஆரூயிர்க் காதலன். அவள் காதலால் வீர வாழ்வும், அரசியல் வாழ்வும் இழந்தவன். மூவருள் முதல்வன்.

2. அக்டேவியஸ் ஸீஸர்: மூவருள் ஒருவன்-ஜூலியஸ் ஸீஸரின் புதல்வன்-அரசியல் சூழ்ச்சியில் வல்லவன். மற்ற இருவரையும் எதிரிகளையும் வைத்துச் சொக்கட்டானடிய தலைவன்.

3. லெப்பிடஸ்: மூவருள் கடையானவன்-அக்டேவியஸால் அந்தோணியின் ஆற்றலைக் குறைக்க உயர்த்தப்பட்ட பெருங்குடி செல்வன், வெள்ளையுள்ளமும், பெருந்தன்மையு

மகன்.

முடையவன்.

4. பாம்பி: மூவரின் பொது எதிரி. கடற்படை வலிமை யுடையவன். பெருந்தன்மையும், நம்பிக்கையும் உடையவன்.

5. எனோபார்பஸ்: கிளியோப்பாத்ராவின் அமைச்சன்; படைத்தலைவன்; அரண்மனைப் பணியாளர் தலைவன்.நண்பன். காதல் தோழன்.

6. அந்தோணியின் துணைத்தலைவன்: அந்தோணியிடம் பற்றுடையவனாயினும் தவறுகளைக் கண்டிக்க எதிரியிடம் சென்று அவன் பெருந் தன்மையினால் பின்னும் கழிவிரக்கங் கொண்டவன்.

7. தூதர்: