பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

அப்பாத்துரையம்

பெண்டிர்:

1. கிளியோப்பாத்ரா: எகிப்து அரசி. டாலமிகளின் வழி வந்தவள். அழகி, ஒப்பற்ற சொல் திறமுடையவள். ஸீஸர், பாம்பி முதலியவரைக் காதல் திறமையாகக் கொண்டு அந்தோணியின் காதலிற்குத் தன்னைத் திறையாக்கிக் கொடுத்தவள்.

2. பல்வியா: அந்தோணியின் முதல் மனைவி.

3. அக்டேவியா: அந்தோணியின் இரண்டாம் மனைவி. கதைச் சுருக்கம்

ஜூலியஸ் ஸீஸருக்குப் பின் ரோம் அரசியல் மூவர் கையில் சிக்கியது. பொதுமக்கள் உள்ளங் கவர்ந்த வீரன் அந்தோணி, ஜூலியஸ் ஸீஸர் மகன் அக்டேவியல் ஸீஸர், லெப்பிடஸ் என்ற செல்வப் பெருங்குடி மகன் ஆகியவரே இம்மூவர், அவருள் அந்தோணியே ஒப்பற்ற வீரனாதலின் கீழ் நாடுகளனைத்தையும் எகிப்தையும் வென்றடக்கினான். ஆனால் முன் ஸீஸரையும் பாம்பியையுங் காதல் சூழலில் திறைகொண்ட கிளியோப்பாத்ரா அவனையும் கவர்ந்தாள்.

அரசி

அரசியல் சூழ்ச்சி வல்ல அக்டேவியஸினைச் சிலநாள் அந்தோணியின் முதல் மனைவி பல்வியா எதிர்த்து நின்றாள். அவள் இறந்தபின் அக்டேவியஸ் அந்தோணியை வருவித்துத் தன் ஒன்றுவிட்ட தங்கை அக்டோவியாவை அவனுக்கு மணந்து அவனைப் பிணைத்தான். பின் அவனுதவியால் பாம்பி என்பவனைத் தம்முடன் நட்பாய்ச் செய்தான்.

ஆனால் விரைவில் பாம்பி இறந்தான். லெப்பிடஸை நயமாகக் குற்றஞ்சாட்டி அக்டேவியஸ் கொன்றான். பின் அந்தோணியும் பகை தொடுக்க முயன்றான். கிளியோப்பாத்ரா காதல் வாழ்வால், அவன் எல்லா நாடும் பிடிக்குமளவும் அந்தோணி அசையவில்லை. எகிப்தை எதிர்த்த பின்னும் அவள் பிணக்கு வழி நின்று போரில் தோல்விகள் பெற்றான். இறுதியில் தம் காதல் வாழ்விலேயே அழுந்தி இருவரும் தற்கொலை செய்து எகிப்தை அக்டேவியஸுக்கு விடுத்தனர். உலகியல் சூழ்ச்சியில் வல்ல அக்டேவியஸ்கூட அந்தோணியின் வீரத்தின் அருமையையும் அதனை விழுங்கிய காதலின் பெருமையையும் பாராட்டினான்.