பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

1. வென்றி வீரனையும் வென்ற மெல்லியலாள்

65

கிளியோப்பாத்ரா எகிப்தின் ஒப்பற்ற அரசி அவள் கரிய நிறமுடைய வளாயினும் மாசு மறுவற்ற வடிவழகி. அவள் தன் ஒரு பார்வையால் உலகையே ஆட்டி வைக்கும் திறமுடையவள்.

மக்களை அறியும் நுண்திறத்திலும், அவர்களை மகிழ்ச்சியுள் ஆழ்த்தும் நயத்திலும் அவளுக்கு யாரும் ஈடு அற்றவர். அவள் நாத்திறனோ சொல்லுந் தரமுடையதன்று. உலகின் கவிஞர்களும் நாடக ஆசிரியர்களும் அவளிடமிருந்தே தம் கலைத்திறனைக் கடன் வாங்கவேண்டும்.

எகிப்து நாட்டு மக்கள் மாயத்திற்கும் மந்திரத்திற்கும் பேர் போனவர்கள்.அவர்கள்கூட, அவள் நாவசைத்தால் உலகசையும் என்றும், அவள் முக அழகு சற்றுக் குறைந்திருந்தால் உலகின் வரலாறே முற்றிலும் மாறியிருக்கு மென்றும் கூறுவாராம்.

இங்ஙனம் கூறியதில் வியப்பு எதுவும் இல்லை. அவள் முதலில் மணந்த எகிப்து அரசன் டால்மிக்குப் பின், உலகை வென்ற வீரர்களும் ரோமப் பெருந்தலைவர்களுமான பாம்பியும் ஸீஸரும், ஒருவர் பின் ஒருவராக அவள் கவர்ச்சியுட்பட்டு அவள் காலடியில் துவண்டுகிடந்தனர். அவர்கள் உலகினர் அஞ்சும் வீரமும் வரலாற்றில் நின்று நிலவும் புகழும் உடையவராயினும், அவள் அழகின் முன், அவள் மாய மிரட்டல்களின் முன், தலைவணங்கி நின்றனரேயன்றி வேறானாரல்லர்.

ஸீஸருக்குப் பின் ரோமப் பேரரசைத் தன் வீரத்தாலும் தோள் வலியாலும் ஆளுந் திறமுடையவன் அந்தோணி என்ற வீரனே. ஆயினும் அவன் பெருந்தன்மையுடையவன்; இன்ப வாழ்விலும்,நண்பருடன் கூடிக் குலாவுவதிலும் விருப்புடையவன்; அரசியல் பெருமையை நாடியவன் அல்லன். ஆகவே ரோமின் அரசியல் அவன் காலடியில் கிடப்பினும் அவன் அதனை ஏற்றுப் பேரரசன் ஆகாமல் அதனைக் கைப்பந்து போல் வைத்து விளையாடினான்.

ஸீஸரின் மகனாகிய அக்டேவியல் ஸீஸர் அந்தோணியின் மனப் போக்கையும் நாட்டின் நிலையையும் கண்டு,அவற்றைத் தனது முற்போக்கிற்குக் கருவியாகப் பயன்படுத்த எண்ணினான்.ரோமப்