பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம்

பெருமக்களுள் செல்வாக்குடைய லெப்பிடஸ் பெருமகனையும் இவ்வெண்ணத்திற்கேற்ப, அவன் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். இம்மூவரும் ரோமப் பேரரசின் மீது ஒருங்கு ஆட்சி செலுத்துவதாக உடன்படிக்கை செய்துகொண்டனர். ரோமப் பேரரசின் பெயரால் கீழ்நாடுகளை வென்றடக்குவதாக அந்தோணி ஏற்றுக் கொண்டான். அதன்படி அவன் சென்று பார்த்தியரும், பாக்தியரும், பாரஸீகரும், அயோனியரும் வருண்டோடும்படி போர் புரிந்து பின் எகிப்தையும் வென்று கீழ் அடக்கினான். ஆயின், அந்தோ! நஞ்சூட்டிய அமிழ்தாகிய கிளியோப்பாத்ராவின் வனப்பில் ஈடுபட்டு அவன் தன் வீரமும் உயர்வும் இழந்ததோடு, தன் வெற்றி விழாவை அறவே மறந்து காதல் விழா அயர்வானாயினன்.

அந்தோணிக்குப் பல்வியா என்ற ஒரு மனைவியுண்டு. அவள் மிகுந்த அறிவும் திறமையும் உடையவள் ஆயினும், உணர்ச்சி வசப்பட்ட அந்தோணி போன்ற ஆடவனைக் கட்டுப்படுத்தப் போதிய கவர்ச்சியற்றவள். அவன் உயர்வையும் வீரத்தையும் அவள் நன்கறிவாள். அவனையொத்த வீரனைக் கணவனாகப் பெற்றதற்காக அவள் இறம்பூது எய்தினாள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவளால் முடியவில்லை. உயர்குடியிற் பிறந்த அவளுக்கு அரசியல் சூழ்ச்சிகள் நல்ல பாடமாயிருந்தன. அவற்றை எதிர்க்கும் எண்ணம் கணவனிடம் இல்லை என்பதை அவள் கண்டு அவன் மீது சீற்றம் கொண்டாள். இதனால் காதலுறவு பறந்தது. அவன் செய்ய வேண்டும் அரசியல் நடவடிக்கைகளை எடுத்து அவள் அவன் அரசியல் அமைச்சனாகச் செயலாற்ற மட்டுமே அவளால் முடிந்தது.

இந்நிலையில் அவள் அந்தோணியின் உடன்பிறந்தான் உதவியால் ஒரு சிறு படை சேர்த்து ஸீஸரை எதிர்த்துப் போரிட்டாள். இங்ஙனம் செய்தது உண்மையில் ஸீஸரின் வன்மையைக் குறைப்பதற்காக மட்டுமன்று; அந்தோணியை ரோமிற்குக் கொண்டு வருவதற்காகவுமேயாம்.

கேவலம், பெண்ணாகிய பல்வியா இங்ஙனம் ஆடவர்களை வீரத்திலும் திறனிலும் மடக்குவது தெய்வத்திற்குப் பொறுக்க