பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

67

வில்லை போலும்! அஃது இந்த இக்கட்டான நிலையில் அவளைத் தன் பக்கம் அழைத்துக் கொண்டது.

கண்பார்வை

என்னும்

கிளியோப்பாத்ராவின் நிலவொளியில் அவளது கருங்குழலென்னும் முகிலினிடையே விளையாடி, உலக ஆட்சியையும் ரோம் அரசியலையும் மறந்திருந்த அந்தோணி, பல்வியா இறந்தது கேட்டு வருந்துவதற்கு மாறாகத் தன் இன்ப வாழ்வின் இடையூறு ஒன்று அகன்றதென்று கருதி மகிழ்ந்தான்.

கிளியோப்பாத்ரா இதுவரை வீரர், அரசர்-பேரரசர் முதலிய பலர் நெஞ்சம் திறைகொண்டு அவர்கட்கு ஆட்படாது நின்றவள் எனினும், அந்தோணியைக் கண்டதுமே அவன்பால் தன் நெஞ்சம் தன்னையும் மீறிச் செல்வதை உணர்ந்தாள். இதுவரையிற் பிறர் நெஞ்சில் வீறுற இருக்கை கொண்டதன்றித் தன் நெஞ்சில் பிறர்க்கிடந்தராத அத் தையலர் மாணிக்கம் இன்று அதே நெஞ்சில் வேறெதற்குமிடமின்றி அவன் வடிவழகும் பண்பழகும் வந்து நிறைந்ததை உணர்ந்தாள்.

எகிப்தில் அந்தோணி வாழும் வாழ்க்கையைப் பற்றி ரோமிற் பலரும் பலவாறு தத்தம் மனம் மனம் போனபடி பிதற்றுவாராயினர், அவற்றைக் கேட்டு மூவர் ஒப்பந்தத்திற் கையெழுத்திட்ட மற்ற இருவரும் மனங் கவன்றனர். அவர்களுக்குப் பொது எதிரியாகிய பாம்பியிடம் அரிய கடற்படை மூன்று இருந்தது. அதனால் அவர்கள் எளிதிற் பேரரசு முற்றும் சென்று அடக்கியாள முடியாதபடி அவன் அவர்களைத் தடைசெய்து கொண்டிருந்தான். அந்தோணியின் முழு ஒத்துழைப்பின்றி அவர்களால் அவனை எதிர்த்தடக்க முடியாதென்று அறிந்து, அவர்கள் அந்தோணிக்கு மேன்மேலும் தூதரை அனுப்பி அரசியல் வாழ்விலீடுபடுமாறும், ரோம் நகர் வந்து தம்முடன் கலக்குமாறும் வேண்டினர்.

ஆனால், இவ்வரசியல் தூதர்கள் வரவு அந்தோணியின் காதல் வாழ்வாகிய நறுந்தேனிடையே அத்தேனைக் குடிக்க வொட்டாமல் கெடுக்க வரும் ஈக்களின் வரவு போன்றிருந்தது. அரிய துயிலிளாழ்ந்தவன் உடலிற் கொசுக்கடித்தால், அவன் தூக்கத்தோடு தூக்கமாக அதனை அறைந்து கொண்று மீண்டுந் தூங்குவதுபோல, அவன் முதன்முதல் வந்த தூதனை