பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

அப்பாத்துரையம்

வரவேற்கவோ,அவன் யாரிடமிருந்து வந்தானென்று கேட்கவோ கூடச் செய்யாமல், பணியாட்கள் மூலமே அவனைத் துரத்திவிட்டான். இது கேட்டு ஸீஸர் மிகவும் வெகுண்டா னனினும் இடமும் வேளையுமறிந்து அதனை அடக்கிக் கொண்டு பொறுமையுடன் மீண்டும் மீண்டும் ஆளனுப்பிக் கொண்டேயிருந்தான்.

2. மணமும் அரசியலுறவுகளும்

'அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' என்ற உண்மைப்படியே, பல்வியாவின் பிரிவுச் செய்தியால் ஏற்பட்ட நல்லுணர்ச்சியாலோ, அந்தோணியின் மனத்திலுங் கூடச் சில நாளில் ஒருவகையான ஆண்மையுணர்ச்சியும் மனச்சான்றும் எழுந்து அவனது வாழ்க்கைப் போக்கை-சோம்பல் வாழ்வைக்- குறைகூறத் தொடங்கின. பகைச் சிங்கத்தின் உறுமல் கேட்டுப் பெண் சிங்கத்தின் குழைவையும் குட்டிகளின் நடுக்கத்தையும் பாராமல் வீறிட்டெழும் சிங்கவேற்றைப் போல அவன் கிளியோப்பாத்ராவின் காதலாகிய பட்டுநூல் வலையை அறுத்தெறிந்து ரோமிற்குப் புறப்பட்டான்.

அந்தோணிமீது, அவன் காதல் நெஞ்சின்மீது தான் ஆட்சி செலுத்தினும், அதே நெஞ்சிற்கு இன்னொரு பகுதி வீரப்பகுதி உண்டென்றும், அதைத் தான் உறங்க வைக்க முடியுமேயன்றி ஒழிக்க முடியாதென்றும், அது விழித்து விட்டால் அவனைத் தான் அடக்கியாள முடியாதென்றும் கிளியோப்பாத்ரா நன்கு அறிவாள். இப்போது அவன் வீர உரு எடுத்து விட்டபடியால் அவள் அவன் முன் காற்றிலாடும் மாந்தளிரென நடுங்கினாள். அவள் ஆணைப்படி, அவள் சேடியர் அவளுக்கு உடல் நலமில்லையென்றும், அவள் சினங்கொண்டுள்ளாள் என்றும், பலவாறு பேசிப் பார்த்தும் அவன் போவதிலேயே முனைந்து நின்றமை கண்டு அவனிடமிருந்து ஊடித் தன் அறை சென்று, அவனைப் பிரிந்த துயர் பொறாது பிதற்றி அப்பிரிவு நாட்களின் ஒவ்வொரு நொடியையும் ஒவ்வொரு சிறிய ஊழியாக எண்ணிக் கழித்தாள்.

பாம்பியால் அலைக்கழிக்கப்பட்டு நின்ற ஸீஸரும் லெப்பிடஸும் அந்தோணியை ரோமில் கண்டதே, காட்டில்