பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம்

ஆனால், அந்நான்கு உள்ளங்களிலும் ஒன்று மட்டும் இந்நட்பை ஒரு மேலுறையாகக் கொண்டு உள்ளூர நஞ்சைக் கலந்து ஒளிந்து வைத்துக் கொண்டிருந்தது. அதுவே ஸீஸரது உள்ளமாகும். உலகை முற்றிலும் தானே ஆளவேண்டுமென்னும் ஓர் எண்ணத்தையும் அதற்கான சூழ்ச்சிகளையும் தந்திரங் களையும் அல்லாமல், நட்பு, காதல், நம்பிக்கை ஆகிய இத்தகைய எண்ணங்கள் எதற்கும் அவன் அதில் இடங்கொடுக்கவில்லை. ஆகவே பாம்பி, அவர்களைத் தம் விருந்தினர் என்றெண்ணிக் கப்பலில் அவர்கள் தன்னிடம் வந்து சிக்கியபோது அவர்களைச் சிறைபிடிக்க வேண்டுமென்று கூறிய தன் துணைத்தலைவன் மொழியைச் சினந்து கண்டிக்கவும், லெப்பிடஸும் அந்தோணியும் தம் நலனை மறந்து அக்டேவியஸ் ஸீஸருக்கு உயர்வும் ஒப்பரவும் நல்கவும், அக்டேவியஸ் ஒருவன் மட்டும் நெஞ்சில் வஞ்சங் கொண்டு அவர்களனைவரையும் பிரித்து அழிக்கும் எண்ணங் கொண்டவனாயிருந்தான்.

ஊழ் இவ்வகையில் அக்டேவியஸுக்குப் பேருதவி புரிந்தது. முதலாவதாகப் பாம்பி தற்செயலாகத் தன் பணியாள் ஒருவன் கையால் கொலையுண்டான். அதைக் கேட்டதும் இனிலெப்பிடஸ் உதவி வேண்டுவதில்லை என்று கண்டு அக்டேவியஸ், அவன் பாம்பியுடன் மறைவாக எழுத்துப் போக்குரவு வைத்திருந்தான் என்று பொய்க் குற்றஞ்சாட்டினான். அக்டேவியஸிடம் நம்பிக்கை வைத்து அவனை ரோமின் தலைவன் என்றே கொண்ட பெருந்தன்மையும் நாட்டுப் பற்றும் மிக்க லெப்பிடஸ், தான் தன் நாட்டுத் தலைவனது நம்பிக்கையையிழந்ததாகக் கண்டதே தானாகவே தன்நிலையை விட்டு அவனிடம் சிறையாளியாக வந்து நின்றான். அக்டேவியஸ் அப்பெருந்தகை லெப்பிடஸைப் பாராட்டுவதற்கு மாறாக அவன் குற்றத்தை வற்புறுத்தி அவனைக் கொலை செய்தான்.

ரோமப் பேரரசின் பங்காளிகளுள் இப்போது அக்டேவியஸுக்கு எதிரியாக மீந்திருந்தவன் அந்தோணி ஒருவனே. தனது மூன்று எதிரிகளிலும் வீரத்தாலும் திறனாலும் தனக்குப்பேரிடர் தரத்தக்க எதிரி அவனே என்பது அக்டேவியஸுக்குத் தெரியும். அதனால் அவன் தன் தங்கை மூலம் அவனைப் பிணித்து வைக்க எண்ணினான். ஆனால் இப்போது பாம்பியும் லெப்பிடஸும் போனபின், அதுவும் அவன் கிளியோப்