பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 3

71

பாத்ராவின் வலையில் பிணிப்புண்டிருக்கையில் அவனை எதிர்ப்பது அவ்வளவு கடுமையானதன்று என்றுங் கண்டான். அந்தோணியும் தனது மனச்சான்றுக்கு இடங்கொடுத்த அளவே அக்டேவியாவுக்கு முடையவனாயிருந்தான்.

இணக்க

உள்ளுணர்ச்சியும் இன்ப விழைவும் ஏற்பட்டதே இல்லை; அவள் அவனுக்குக் கரும்பின் நறிய சாற்றினின்று பிரித்தெடுக்கப் பெற்ற வெள்ளிய சக்கைபோலத் தோன்றினாள். அக்டேவியா உலகமெச்சும் மனைவியாதற் குரியவளேயன்றித் தன் உள்ளங் கவர்ந்தவள் அல்லள் என்று அவன் கண்டு கிளியோப்பாத்ரா இருந்த இடம் நோக்கலானான்.

3. பிரிவும், பிரிந்தவர்கூடலும்

அந்தோணி தன்னுடன் இருந்தபொழுது அவன் தன் காதலுக்கு அடிமை என நினைத்திருந்த கிளியோப்பாத்ரா, இப்போது உண்மையில் தானே அவன் காதலுக்கு அடிமை என்பதை உணர்ந்தாள். அவள் உடலும் உயிரும் இப்போது இடைவிடாது அவனது தொடர்பு, அவன் தோற்றம், அவன் மொழிகள் இவற்றிலேயே நாட்டமாய் நின்றன. ஊணிலும் உடையிலும் ஆடல் பாடல்களிலும் அவள் கொண்ட விருப்பு அனைத்தும் அந்தோணி என்னும் ஒரு பொருளால் வரும் இன்பத்திற்குக் கருவிகளாக மட்டுமே இப்போது தோன்றின. அவள் சேடியார் எவ்வளவு வேண்டினும் அவள் அவற்றலோ பிற அரசே காரியங்களிலோ மனஞ் செலுத்தாமல், அந்தோணியையே நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்ட வண்ணம் இருந்தாள்.

ரோமில் அந்தோணி எந்நிலையில் இருக்கிறான் என்னென்ன செய்கிறான் என்பதையறிய, கிளியோப்பாத்ரா மறைமுகமாக ஒற்றரை அனுப்பியிருந்தாள். அவர்கள் மூலமாக வந்த செய்திகள் அவள் மனத்தைப் பின்னும் மிகுதியாகக் குழப்பின. அந்தோணி தன் காதல் தளையினின்று விடுபட்ட தன்றி, அரசியலுள் முழு மனத்துடன் ஈடுபட்டு மூவருடன் ஒத்துழைத்தது அவள் மனத்தை வாள்போல் ஈர்த்தது, அதன்பின், அவன் அக்டேவியாவை மணந்தான் என்ற செய்தியைக் கேட்கவே, அவளடைந்த சினத்திற்கும் துயருக்கும் எல்லையில்லை.