பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

அப்பாத்துரையம்

அச்செய்தி கொண்டு வந்த ஒற்றனையே முதலில் அவள் சினந்து பாய்ந்து கொல்ல இருந்தாள். அவள் பணியாட்களுள் தலைவனான எனோபார்பஸ் அவளுக்குத் தேறுதல் கூறி அவளை அமைதிப்படுத்தினான். அந்தோணி அக்டேவியாவை மணந்தது உண்மையில் ஸீஸருடன் அவனைப் பிணைப்பதன்று, முரணச் செய்வதேயாம் என்று அவன் எடுத்துக்காட்டினான். அதோடு அக்டேவியா அழகற்றவள் என்றும், அந்தோணியின் உள்ளக் கிளர்ச்சிக்கு ஒரு நொடியும் ஈடு செலுத்தக்கூடாதவள் என்றும் அவன் கூறவே, அவள் தன் துயரை மறந்து அந்தோணியை மீண்டும் தன் பக்கம் இழுக்கும் வழி யாதென ஆராயலானாள்.

இச்சமயம் அக்டேவியா தன் கணவனை விட்டு அகன்று தன் தமையனைப் பார்க்கச் செல்கிறாள் என்று செய்தி வந்தது.

ஸீஸர் இப்போது நேரடியாக அந்தோணியைக் குறை கூறவும், அவன் நண்பர்களைச் சிறைபடுத்தி ஒறுக்கவும் தொடங்கினான். இவற்றைக் கேட்டும், லெப்பிடஸினிடம் ஸீஸர் நடந்துகொண்ட வகையை அறிந்தும் அந்தோணி அவன்மீது சீற்றங்கொண்டு அதனை அக்டேவியாவினிடமும் காட்டினான். கணவனையும் தமையனையும் ஒருங்கே பற்றிநின்ற அக்டேவியா தமையனை நேரே சென்று திருத்த எண்ணி ரோம் நகர் சென்றாள்.

லெப்பிடஸின் நட்பையும் பெருந்தன்மையையும் பாராத ஸீஸர் அந்தோணியின் உறவையும் தங்கையின் நல்வாழ்வையும்கூட எண்ணிப் பாரான் என்பது எதிர்ப்பார்க்கத் தக்கதேயன்றோ? அவன் தங்கை வாய் திறக்கும் முன்னாகவே, அவளை அந்தோணி ரோமப் பேரரசின் பங்காளியாகிய தன் மனைவியென்ற முறையின் விருதுகளுடனும் மேளதாளங்களுடனும் அனுப்பாமல் பணிப் பெண்போலத் தனியே அனுப்பினான் என்று அவன்மீது சீறினான். அந்தோணி மீது இந்த அவமதிப்பிற்காகப் பழிவாங்குவ தெனக்கூறி, அவன் தன் பகைமைக்குப் புதிய சாக்குக் கண்டான். இங்ஙனம் மைத்துனர் இருவரையும் ஒன்று சேர்க்கும் எண்ணத்துடன் வந்த அக்டேவியா அவர்களைப் பிரித்து வைக்கவே உதவியவள் போலானாள்.

அக்டேவியா போனதே, அந்தோணி தான் இதுவரை வலியுறுத்தி மேற்கொண்டிருந்த செயற்கையாண்மையாகிய