மன்பதைக் கதைகள்
79
நகை நட்டு, திருமணச் செலவுகளுக்கான பணம் எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன்.
66
'குருகூரார் வீடு என்றால் எளிதா? அவர்களுடன் சரிசமமாக மதிப்புப் பெறுவதற்காகவே நான் பெரும்பணம் செலவு செய்து உயர்குடி விருந்துகளுக்கெல்லாம் சென்று வருகிறேன். என் வாழ்வின் ஒரே ஆவலைக் கெடுத்துவிடாதே பாடு! அத்துடன் உன் அத்தான் உன் அண்ணன் மகனை ஏளனமாகப் பேசியதற்காக மன்னித்துவிடு. அவனுக்கு ஏற்ற நல்ல இடம் பார்த்துத் திருமணம் செய்யும் பொறுப்பைக்கூட நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்றாள்.
பாடுமாங்குயில் ஒன்றும் விடைதரவில்லை. எதிர்ப்பில் தையல் நாயகத்தைச் சமாளிக்க அவள் வகை தெரிந்திருந்தாள். ஆனால் அது நட்பாதரவாக மாறிய பின் அவள் செய்வகை இன்னதென்று அறியாது திகைத்தாள். தையல் நாயகத்தின் திட்டத்தை உதறித் தள்ளவும் அவளால் முடியவில்லை. அதேசமயம் குழந்தைகள் உள்ளத்தின் போக்கறிந்த பின், அதை மாற்றவும் அவள் துணியவில்லை. மாண்ட அண்ணன் அண்ணியின் முகங்கள் கண்ணீருடனும் கம்பலையுடனும் அவள் இமைகளிடையே ஓயாது நிழலாடின.
பாடுமாங்குயிலுக்கிருந்த இரண்டக நிலை பண்ணன் பாடிலிக்கு இல்லை. அண்ணன் சேந்தன் சொல்லை அவன் என்றும் தட்டியதில்லை. தையல் நாயகத்தினிடமோ அவன் மதிப்பு இன்னும் பெரிது. அவள் குறிப்பறிந்து நடக்கவே அவன் அரும்பாடுபட்டான். இந்நிலையில் அவன் தன் மனைவியின் விருப்பத்தையோ மகள் விருப்பத்தையோ ஒரு சிறிதும் எண்ணிப்பாராமல், அண்ணியின் திட்டத்தை நிறைவேற்றுவ திலேயே முழு மூச்சுடன் இழைந்தான்.
குருகூரார் வீட்டுத் தொடர்புக்கு ஏற்ற முறையில் பண்ணன் பாடிலி தன் நடையுடை தோற்றம், வீடு, தொழிலகம் ஆகியவற்றை முற்றிலும் செப்பம் செய்து உயர்வுபடுத்தினான். உயர்குடியினர், அரசியற்பணி முதல்வர் நடத்தும் விருந்து கேளிக்கைகளில் தானும் தன் குடும்பமும் சென்று கலந்து கொள்ள ஏற்பாடு செய்தான். பண்ணன் சேந்தனும் தையல் நாயகமும் இவற்றுக்கான செலவுகளிலும் அழைப்புகள்