பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

81

மனைவி செய்ததே சரியென்று கணவனும் வெளியேறத் தொடங்கினான்.பண்ணன்பாடிலி அண்ணன் அண்ணி இருவர் கால்களிலும் விழுந்தழுதான். என் மனைவியையும் மகளையும் நான் சரிசெய்துகொள்கிறேன். அவர்கள் உங்கள் சொல் கேளாவிட்டால், அந்த ஆண்டியுடன் அவர்களையும் வெளியேற்றி நானாவது உங்களுக்கேற்றபடி நடந்து கொள்கிறேன். நீங்கள் வெளியேற வேண்டாம்" என்றான்.

பக்கத்துறையிலிருந்து இவற்றைக் கேட்டுக் கொண்டிருந் தான் அருண்மொழி. அவனருகிலேயே அன்பரசி நின்றிருந்தாள். சிறிது நேரம் இருவர் உள்ளங்களும் விம்மிவெடித்துவிடும் போலிருந்தன. ஆனால் அருண்மொழியின் உள்ளத்தில் தான் குமுறல் மிகுதியாயிருந்தது. இதை அன்பரசி அறிந்து உருகினாள்.

அன்பரசியின் பாசம் ஒருபுறம், தன்மானம் ஒருபுறம் அருண்மொழியின் உள்ளத்தில் போராடின. இந்தப் போராட்டம் பெரிதானாலும் அது முடிவுற ஒரு கணமே பிடித்தது. அதன்பின் அவன் திடுமென நிமிர்ந்து நின்றான். “எனக்காக உன் தாய் தந்தை ஆண்டியைப் பின்பற்ற வேண்டாம், வெளியேறவும் வேண்டாம். நான் போகிறேன். உயிரை விட்டுப் போகும் உடல்போலப் போகிறேன். என்னை மன்னித்துவிடு" என்றுகூறி அவன் தட தடவென வெளியேறினான்.

“என்னைவிட்டு எப்படிப் போகிறது என் உயிர்?” என்று கூறி அன்பரசியும் அவன் செல்லும் திசையில் காலடி எடுத்துவைத்தாள். ஆனால் நோயும் துயரமும் ஏற்கெனவே அவள் ஆற்றலைக் கெடுத்திருந்தன. அவள் படிதடுக்கிக் கீழே விழுந்தாள். முன்னே சென்ற அருண்மொழி அதைக் காண வில்லை. அவன் செல்லும் திசையறியாமல் பித்தன் போல நகர்த் தெருக்களின் வழியே சென்றான். சரேலென்று நகர் கடந்து பின்னும் நடந்து கொண்டேயிருந்தான்.

கீழே விழுந்த அன்பரசி எழுந்திருக்கவில்லை. மூக்கிலிருந்தும் உதட்டிலிருந்தும் குருதி பெருக்கெடுத்தோடிற்று. தாயும் தந்தையும் மட்டுமன்றிப் பண்ணன் சேந்தனும் அவன் மனைவியும்கூடத் திடுக்கிட்டு அவளைத் தூக்கி எடுத்துப் படுக்கையில் கிடத்தினர். பண்ணன் சேந்தன் விரைவில்