பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 39

ஓடிச்சென்று மருத்துவர் பலரை அழைத்து வந்தான். தையல் நாயகம் கோவெனக் கதறியழுது அன்பரசியை மடிமீது வைத்து உணர்வு வருவிக்க முயன்றாள். ஆனால் பண்ணன்பாடிலியும் பேசவில்லை. பாடுமாங்குயிலும் மூச்சுவிடவில்லை. இருவர் உள்ளங்களிலும் இருவேறுவகைப்பட்ட போராட்டங்கள் நிலவின. பண்ணன்பாடிலி பாசத்துடன் பணத்தையும் பகட்டையும் போட்டியிட விட்டான். ஆனால் பாடுமாங்குயில் நெஞ்சம் அண்ணன் அண்ணி நினைவில் ஆழ்ந்து

சோர்ந்திருந்தது.

அன்பரசிக்கு மெல்ல மெல்ல உணர்வு வந்தது. ஆனால் இயல்பான உணர்வு முற்றிலும் வரவில்லை. 'அருள், என் உயிர் என்னைவிட்டு எங்கோ போய்விட்டது' என்ற ஒரு வாசகம் மட்டும் மீண்டும் மீண்டும் அவள் உதடுகளில் மெல்ல முணுமுணுத்தன. பின் அவள் அடங்கினாள். எவர் பேச்சுக்கும் அவள் மறுபேச்சுப் பேச வாய் திறக்கவில்லை. அவள் கண்கள் மையாது நின்றன. ஆனால் முன் நிற்பவரையே அவள் அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை.

தாயோ தந்தையோ அவளருகில் வந்து ஆதரவுடன் பேசியபோதுகூட அவள் ஒன்றும் வாயாடவில்லை. ஆளடை யாளம் காணமுடியாததுபோல் திருதிருவென விழித்தாள். ஒரு தடவை தாய் பெருமூச்சுவிட்ட சமயம் அவள் ‘நீ யாரம்மா' என்று அவளை நோக்கிக் கேட்டாள். இது காணத் தாய் உள்ளம் விம்மி விம்மி அழுதது. மருத்துவர் வந்து வந்து போயினர். தம்மாலான வகையிலெல்லாம் நாடி பார்த்தனர். மருந்து கொடுத்தும் பார்த்தனர். நோய் இன்னதென்றே எவருக்கும் பிடிபடவில்லை. மருந்தோ உணவோ நீரோ எதுவும் உட்கொள்ளாமலே அவள் நாட்கள், வாரங்கள் படுக்கையில்கிடந்து புரண்டாள்.

வெளியே சென்ற அருண்மொழியும் எங்கே செல்வதென்றறியாமல் கால் சென்ற இடமெல்லாம் சுற்றினான். ஊணுடை உறக்கம் ஒழித்து அவன் பித்தன் போலானான். அவனைக் காண மக்கள் சிலர் அஞ்சினர். வேறு சிலர் இரங்கினர். சில காலம் அவன் களக்காட்டில் சென்று திரிந்தான். சில நாட்கள் வாரியூர் வந்தே தெருத் தெருவாகச் சுற்றினான். மாமன் கடையருகிலோ தையல்நாயகம் வீட்டருகிலோ அவன்