மன்பதைக் கதைகள்
83
செல்வதில்லை. ஆனால் அடிக்கடி அன்பரசியின் வீட்டின் பக்கம்
வட்டமிட்டான்.
அவன் நிலையறிந்து நண்பர், சுற்றத்தார் பண்ணன் பாடிலியிடமோ பாடுமாங்குயிலினிடமோ வந்து கூறினர். பண்ணன்பாடிலியும் எதுவும் பேசாமல் இருந்து வந்தான். பாடுமாங்குயில் மகளை நோக்கியும் சுற்றுமுற்றும் நோக்கியும் பெருமூச்சு விடுவாள். ஆனால் தையல்நாயகி இவை கேட்டு முன்னிலும் குமுறினாள். “இதெல்லாம் மகளும் தாயும் நடிக்கிற பாசாங்கு நாடகங்கள். நோய்நொடி என்றால் மருத்துவருக்குப் புரியாமலா போகும்? மேலும் தாயை மகளுக்கு அடையாளம் தெரியவில்லையாமே! நாட்கணக்கில் உணவு நீர் இல்லாமல் உயிருடன் வதங்குகிறாளாமே! இவற்றை யாராவது எப்போதாவது கேட்டதுண்டா? எல்லாம் பித்தலாட்டம், வெறும் பித்தலாட்டம்!” என்று அவள் எரிந்து விழுந்தாள்.
மகள் மனைவி ஆகியவர் நிலைபற்றி பண்ணன் பாடிலி அவ்வளவு கவலைப்படவில்லை. ஓர் ஏழை உறவினனுக்காக அண்ணன் அண்ணி ஆகியோர் மனத்தை அவர்கள் இவ்வளவு புண்படுத்துகிறார்களே என்று மட்டும் அவன் நொந்து
கொண்டான்.
ஒருநாள் திடுமென அருண்மொழி அன்பரசியின் வீட்டுக்குள் வந்து அவள் அறையினுள் நுழைந்தான். அச்சமயம் வீட்டில் பாடுமாங்குயிலைத் தவிர வேறு யாரும் இல்லை. அவள் அவனைத் தடுக்கவில்லை. மகள் நிலையில் அது தேவைப்படுவ தாகவும் அவள் கருதவில்லை. ஆயினும் மகள் பற்றிய கவலையில் கூட அவன் தோற்றம் கண்டு அவள் இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை.“போ, அருள்! போய்ப் பார்! நீ போன பின் அன்பு இருக்கும் காணச் சகியாத காட்சியைச் சென்று பார்! இப்படி யாயிற்றே என் பிள்ளையின் நிலை!" என்று அவள் று பொருமினாள்.
“அன்பு! அன்பு!" என்று அலறியவாறு அருண்மொழி அறையினுள் புகுந்தான். முதலில் எல்லாரையும் பார்ப்பது போலவே அன்பரசி அவனையும் பரக்கக் கண்ணுருட்டிப் பார்த்தாள். ஆனால் மீண்டும் மீண்டும் அவன் அவள் பெயர் கூறி