84
அப்பாத்துரையம் - 39
அழைத்தபோது அவள் கண்கள் திடீரென இயற்கை ஒளி வீசிற்று. அவள் முகமெல்லாம் புன்முறுவல் எழுந்தது.
66
“ஆ, நீயா-நீங்களா, அருள்!" என்றாள்.
தாய் அவள் நல்லுணர்வு கண்டு மகிழ்வுடன் வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.“என்னை உனக்குத் தெரிகிறதா அம்மா?” என்றாள்.
"ஏன் அம்மா இப்படிக் கேட்கிறாய்? எனக்கு அப்படி என்ன வந்தது” என்று அன்பாகத் தாய் பக்கம் திரும்பிக் கேட்டாள்.
அழுத குரலில் தாய் யாவும் கூறினாள். அன்பரசி வியப்பார்வத்துடன் தாயையும் அருளையும் மாறி மாறி நோக்கினாள். பின் அருண்மொழியை நோக்கி, என்னைவிட்டுப் போய்விட மாட்டீர்களே!' என்றாள்.
66
'அன்பு, நானா உன்னை விட்டுப் போனேன்? உன்..
55
இனி
அன்பரசி முகத்தில் எழுந்த கறுப்பு நிழல் கண்டு பாடு மாங்குயில் அருண்மொழியின் வாயைப் பொத்தினாள். "போதும் அருள்! இனி நீ போகக் கூடாது. போனால் அவளை நான் இழந்துவிடுவேன்” என்றாள்.
“அப்படியானால் நான் கட்டாயம் போகவில்லை அத்தை!” என்றான் அருண்மொழி. இம்மறுமொழி அன்பரசியின் உடலையும் உள்ளத்தையும் ஒரு நொடியில் முன்னிலைக்கே கொண்டுவந்து விட்டது. இடையே எதுவும் நடக்காததுபோல் அவள் அருண்மொழியின் கையை வருடினாள். “நீங்கள் சற்று இருங்கள், உங்களுக்கு நான் சிற்றுண்டி தருவிக்கிறேன்,” என்றாள்.
பாடுமாங்குயிலால் இது கேட்டுச் சிரிக்காமல் இருக்க
முடியவில்லை.
அன்று பாடுமாங்குயில் தன் கணவனைக் கரையாத வண்ணம் கரைத்துப் பார்த்தாள். "குழந்தை மாதக் கணக்காகக் கிடந்த கிடை உங்களுக்குத் தெரியுமே! அருள் வந்தவுடன் அவளுக்குப் போன உயிர் வந்துவிட்டதையும் பார்த்தீர்கள். மருமகனுக்காக அல்லவானாலும், மகள் உயிர் காப்பாற்றுவதற் காகவாவது அவள் விருப்பப்படி விட்டு விடுங்கள்” என்று அவள் கணவன் நாடியைப் பிடித்துத் தங்கினாள்.