பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

66

85

"என் அண்ணியிடமே சொல்லிப் பார்! அவள் சொல்லை நான் தட்டிவிட முடியுமா? அதைவிட எனக்கு இந்த மட்டிப் பெண்ணின் உயிர்கூடப் பெரிதல்ல" என்று வழக்கமான உணர்ச்சியற்ற நிலையில் அவன் கூறிவிட்டான்.

பலநாள் அலைந்த அலுப்பால் அருண்மொழி அன்றிரவு அயர்ந்து உறங்கினான். ஆனால் உறக்கத்திடையே ஒரு மென்கரம் அவனை மெல்லத் தட்டி எழுப்பிற்று.

அன்பரசி இரவெல்லாம் உறங்காது விழித்திருந்தாள் என்பதை அவள் முகம் அவனுக்குக் காட்டிற்று.

“என்ன அன்பு! ஏன் நள்ளிரவில் விழித்திருக்கிறாய்? என்ன செய்தி" என்று கலவரத்துடன் கேட்டான் அருண்மொழி.

"அன்பரே, உம் பாசத்தின் ஆழத்தை நானும் என் அன்பின் ஆழத்தை நீங்களும் உணர்ந்து கொண்டதுபோல, இருவர் தொடர்பின் ஆழத்தை அம்மா நன்கு உணர்ந்து கொண்டிருக் கிறாள். அவள் எப்போதும் நம்பக்கமே என்பதை நான் அறிவேன். ஆனால் இப்போது அப்பாவிடம் அவள் நமக்காகக் கல்லும் உருகும்படி மன்றாடி வாதாடியது கேட்டேன். ஆயினும் இரும்பாகியிருந்த அப்பாவின் உள்ளம் இப்போது எஃகாகி யிருக்கிறது. கல்லான பெரியம்மையின் உள்ளத்தின் உறுதி அதை வைரமாக்கிவருகிறது. இந்நிலையில் இனி நமக்குப் போக்கிடம் இல்லை. என் உயிர் இனி என்னை விட்டுப்போக வேண்டியது தான். நான் இனி என்ன செய்வேன்?" என்று அன்பரசி மறுகினாள்.

அவன் முகம் அந்தக் கணமே மீண்டும் விளறத் தொடங்கிற்று. தன் துடிப்பை மறந்து அவன் அவள் ஆராத்துயர் ஆற்ற முனைந்து கண்ணீர் துடைத்தான்.

"நீ வருந்தவேண்டா அன்பு! நான் இனி என் தன் மதிப்பைப் பெரிதாகக் கருதி முன்போல் உன்னைவிட்டுச் செல்லப் போவதில்லை. என்ன நேர்ந்தாலும் உன்னுடனே இருக்கத் துணிந்து விட்டேன். உன் உயிர் இனி உன்னைவிட்டுப் போகாது என்றான்.

""