பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

அப்பாத்துரையம் - 39

அவள் அவனை ஆர்வமுடன் வாரி அணைத்துக் கொண்டாள். ஆனால் முகத்தில் படர்ந்த வெள்ளொளி ஒருசிறிதுதான் அகன்றிருந்தது. அவள் குரல் இற்ற வீணையின் நாதம் போலக் கரகரத்தது.

66

உங்கள் தன்மதிப்பு இனி என் தன் மதிப்பு, நீங்கள் போகத்தான் வேண்டும். அதுமட்டுமல்ல. நீங்கள் போகும்போது இனி நான் உங்களைப் பின் தொடரமாட்டேன். ஏனெனில் உங்களையும் என்னையும் ஒருங்கே உயிர்போல் நேசிக்கும் என் தாயை நாம் தனியாக விட்டுச்செல்லப்படாது. ஆயினும் என் உடல் இங்கே கிடக்க, உயிர் உங்களை விரைந்து தொடரும். ஆகவே நீங்கள் விடியுமுன்பே என்னை விட்டகலும்படிதான் உங்களை வேண்டா ா வெறுப்புடன் கேட்டுக்கொள்ள வேண்டியவளாகிறேன்" என்றாள்.

அவள் சொல்லின் பொருள் அவனுக்கு விளங்கவில்லை. அவன் விளக்கம் நாடவும் இல்லை. அவன் தலை சுழன்றது.

அவள் கெஞ்சும் குரலுக்கு அவன் எதுவும் செய்திருப்பான். உயிரும் கொடுத்திருப்பான். அதன் ஆற்றலை அவன் உணர்ந்தான். ஆனால் முதல் தடவையாக அதன் முன் அவன் நடுங்கினான்.

அவள் முகத்தில் மாறுதல் எதுவுமில்லை. அது வரவர வெளிறிக்கொண்டு மட்டும் வந்தது.

அவன் எழுந்தான். கைகள் கைகளைப் பற்ற முனைந்தன. அவள் கைகள் தந்தியடித்தனவேயன்றிப் பற்றவில்லை. ஆனால் அவள் மீண்டும் "தயங்கவேண்டாம், அன்பரே, நான் தான் கூறினேனே, என் உயிர் உங்களைத் தொடரும் என்று. ஒரு பகல் ஒருநாள்தான் நீங்கள் தனியே செல்கிறீர்கள். அதற்குள் என் திட்டம் நிறைந்துவிடும்” என்றாள்.

அவன் ஒருமுறை மீண்டும் தன் அவாவெல்லாம் தீர அவள் முகத்தை நோக்கினான். தள்ளாடிய நடையுடன் திரும்பிப் பார்க்கக் கூடத் துணியாமல் தயங்கித் தயங்கி நடந்தான். வாரியூர் எல்லை கடக்கும்போது பொழுது விடிந்தது.

66

‘ஒரு பகல் ஓர் இரவு! அதற்குள் என் உயிர் உங்களைத் தொடரும்.”