பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

87

தன்பொருள் அவனுக்கு விளங்கவில்லை. 'அந்தோ அதற்குள் அவள் உயிர்விட எண்ணியல்லவா என்னைப் போக்கியிருக்கிறாள்? என்ன செய்தேன்? அந்த விளறிய முகத்தின் கெஞ்சுதலுக்குத் தெரியாமல் இணங்கிவிட்டேனே" என்று புழுவாய்த் துடித்தான். ஆனால் அதே முகத்தின் நிழல் அவனை மேன்மேலும் முன்னே தள்ளிற்று.

66

"அவள் உயிர் போயிற்று என்று கேட்டால், நானும் உடனே உயிர்விடுகிறேன். இது தான் இனி எங்கள் முடிவு!' என்று தனக்குள் கூறியவாறு நடந்தான். அவன் உள்ளம் உயிரையும் வெறுத்தது, உலகையும் வெறுத்தது; அவன் நடையைத் தட்டிவிட்டான்.

ஒருபகல் கழிந்தது. அவன் வாரியூரடுத்த காட்டைத்தான் கடந்திருந்தான். அவன் எதிரே ஒரு கானாறு குறுக்கிட்டது. மலைமீது மேகங்கள் கவிந்தகாலம் அது. ஆறு இருகரையும் புரண்டு பெருமிதத் தோற்றத்துடன் ஓடிற்று.

ஆற்றைக் கடக்கப் படகு வேண்டும். அந்த முன்னிரவிலும் அங்கே ஒரு படகு ஆளற்ற நிலையில் கிடந்தது. அதனருகே ஒரு பெண் மட்டும் நின்றாள்.

0

'நீ யார்? படகு யாருடையது?" என்று கேட்டான்.

‘அது என் கணவன் படகுதான். விடியுமுன் அவர் வந்து விடுவார். நான் படகுக்குக் காவல் இருக்கிறேன்' என்றாள்.

இரவு கழிந்தால், ஆற்றை மட்டுமல்ல, உலக வாழ்வையே கடந்துவிட ஒருப்பட்டான் அவன்.

பொழுது விடிந்தது. ஆயினும் படகோட்டி வரவில்லை. ஆனால் அவன் கையில் பெண் ஒரு முடங்கல் கொடுத்தாள். வியப்புடனும் துடிதுடிப்புடனும் அவன் அதைப் பிரித்து வாசித்தான்.

ஒரு பகல் ஓர் இரவு கழிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஒரு பகல் இருந்து பின் ஆறு கடக்கக் கோருகிறேன்.' - அன்பு.

"படகோட்டியின் மனைவி யார்? இந்த முடங்கல் அவள் கையில் எப்படி வந்தது?' என்று அறியாமல் அவன் மலைத்தான். ஆனால் அன்பரசியின் கையெழுத்து அவனுக்குச் சிறிது