பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 39

தம்பளித்தது. அந்தப் போகா நெடும்பகலைப் படகைச் சுற்றி அங்குமிங்கும் உலாவிக் கழித்தான்.படகோட்டியின் மனைவியும் படகையோ அவனையோ கண்ணிலிருந்து மறையவிடாமல் அப்பக்கமே நடமாடி வந்தாள்.

இரவாயிற்று.

பெண் அவனிடம் படபடப்புடன் வந்தாள். 'படகோட்ட என் கணவர் வரவில்லை. நீங்களே இனி ஓட்டலாம். மறு கரையில் அதை மரத்தில் கட்டிவிட்டுப் போங்கள். என் கணவர் எடுத்துக் கொள்வார்' என்றாள்.

அவனுக்கு எல்லாம் புதிர்மேல் புதிராயிருந்தது. படகை அவன் கட்டவிழ்த்தான்.

தண்டைக் கைப்பற்றினான்.

அவன் கைத்தண்டை உடைக்கவில்லை. அன்பரசி இருக்கும் பகுதி கடந்து மறுகரை செல்ல அவன் தயங்கினான். அன்பரசி சொன்ன சொல் என்ன ஆயிற்றோ? அவளைப் பற்றிய செய்தி ஒன்றும் தெரியவில்லையே' என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

'நான் இதோ வந்து விட்டேன்' என்ற குரல் கேட்டு அவன் திரும்பினான்.

அவன் திகைத்தான். மறுகணம் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்தான். ஏனெனில் அன்பரசியே முழங்காலளவு நீரில் இறங்கி நின்று படகில் ஏற முயன்று கொண்டிருந்தாள். ஒரு கணத்தில் அருண்மொழியின் உதவியால் அவள் படகில் ஏறியமர்ந்தாள். படகு இரவில் அமைதி கிழித்து நீரில் அம்புபோல் விண்மீன்கள் நீரில் ஒளி நிழல்களாகப் படர்ந்தன. 'நீ எப்படி வந்தாய், அம்மா என்ன செய்கிறாள்' என்ற பல கேள்விகள் அவன் உதட்டில் எழுந்தன. ஆனால் அவள் தன் இதழ் பொத்திக் காட்டி அவன் உதடுகளை மூடினாள். அவன் உள்ளத்தின் உணர்வு அதற்குமேல் அவளிடம் எதுவும் கேட்கவிடவில்லை.

பெற்றோரைப் பற்றிய கவலை இல்லாதவளாகவே அவள் அவனுடன் சென்றாள். அவள் கவலைப்படாததறிந்து அவனும் அவர்களைப் பற்றிய கேள்விகளையும் எண்ணங்களையும் மெல்ல மெல்ல மறந்தான்.