மன்பதைக் கதைகள்
89
மானாடு என்ற ஊரில் இருவரும் தங்கி, அந்தண்மைமிக்க ஆன்றோர் ஒருவர் தலைமையில் திருமணம் செய்துகொண்டனர். ஆண்டு ஒன்று இரண்டு மூன்று என்று அகன்றது. ஆடலழகன், பாடுமாங்குயில் என்ற இரு வாய்பேசா எண்ணங்களின் ரு நிழல்களாக அதேபெயர்களுடன் இரு செல்வங்கள் அவர்கள் மடிகள்மீது மாறிமாறித் தவழ்ந்தன. ஒரு தலைமுறை கடந்து அருண்மொழியின் தந்தையும் அன்பரசியின் தாயும் அவர்கள் முன் வந்து தம் பாசவலையை மீண்டும் விரித்தது போலிருந்தது.
அருண்மொழி ஒருநாள் கடைத்தெருவில் ஏதோ ஒரு பொருளை விலை பேசிக்கொண்டிருந்தான்.ஆனால் கடைக்காரன் விலைபேசுவதை நிறுத்தி அருண்மொழியை ஏற இறங்கப் பார்த்தான்.
'ஆ, நீ அருளல்லவா? இங்கே எப்படி வந்தாய்?' என்று கேட்டான். அருண்மொழி ஓரளவு தன் நிலையை விளக்க முற்பட்டான்.
ஆனால் பேச்சு நடுவிலேயே கடைக்காரன் எழுந்து புலி கண்டவன் போல மிரளமிரள விழித்தான். அருகில் நின்றவர்கள் இதுகண்டு திகைத்தனர். அவன் அவர்களை நோக்கித் தழுதழுத்த குரலில் உளறினான்.
"அன்பர்களே! இவன் அத்தைமகளை மணஞ்செய்ய எண்ணி, அது கைகூடப் பெறாமல் பித்தனாய் அலைந்தான். 'பித்தம் தெளிந்து விட்டது போலிருக்கிறது' என்றெண்ணி இவனிடம் பேச்சுக் கொடுத்து விட்டேன். ஆனால் பித்தம் முற்றியிருக்கிறது. இவனை இப்போதே அரசியலாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீங்கள் எல்லாம் உதவி செய்யுங்கள்' என்றான். அருண்மொழிக்கு எதுவும் விளங்கவில்லை. 'அத்தை மகளையே மணஞ் செய்து இரண்டு பிள்ளைகூட எ எனக்கு இருக்கிறது.எனக்குப் பித்தம் எதுவும் இல்லை. வேண்டுமானால் வீட்டில் வந்து பாருங்கள்” என்றான்.
கடைக்காரன் வாரியூரிலிருந்து புதிதாக வந்து கடை வைத்தவன். அவன் தன் பேச்சுக்கு விளக்கம் தந்தான்.
“நண்பர்களே இவர் சொல்வதுகூட எனக்குப் புரியவில்லை. வாரியூரிலிருந்து நான் வந்து இரண்டு நாட்கள்தாம் ஆகின்றன.