பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அப்பாத்துரையம் - 39

வன் அத்தைமகள் அங்கே உயிர் வெறுத்து மரக்கட்டையாய்க் கிடக்கிறாள். தாய் தந்தையர் துடிதுடித்து, இவனைக் கண்டுபிடித்து மணஞ் செய்ய எண்ணி எங்கும் தேடுகின்றனர். இங்கே இவன் மணம் செய்து பிள்ளைகள் பெற்றிருப்பதாகக் கூறுகிறான்.நான் எதை நம்புவது" என்றான்.

பலர்

அருண்மொழியார் என்று தெரியாவிட்டாலும், அவனுக்கு குழந்தைகள் இருப்பதை மானாட்டார் அறிந்திருந்தனர். ஆகவே அவர்கள் அவன் பக்கம் பேசினர்.

இரு

அருண்மொழிக்குத் திடுமென ஒரு புதிய ஐயம் எழுந்தது. அவன் ஊராரை விலக்கி, கடைக்காரரையே வீட்டுக்கு இட்டு வந்தான். வீட்டில் அன்பரசியையும் குழந்தைகளையும் கண்டு கடைக்காரன் உண்மையிலேயே மிகவும் திகில் கொண்டான். அன்பரசியாய் வந்து மாமன் மகனுடன் வாழ்வது அவள் ஆவி யுருவமாயிருக்குமோ? என்று ஐயுற்றான். அதை மெல்ல அருண்மொழியின் காதிலும் முணு முணுத்தான்.

அன்பரசி இதைக் குறிப்பாய் அறிந்தாள். அவள் கடைக்காரனை நோக்கிப் புத்தம் புதிய விளக்கம் தந்தாள்.

“அண்ணா! உங்கள் திகில் அபாயமானது! என் கணவர்கூட அதை நம்பிவிடப் போகிறார். ஆனால் ஆவிகள் உண்டு என்ற நம்பிக்கை உண்மை அறியாத இடத்தில்தான் வெற்றிபெறும். நான் என் கணவனை அடைவதற்காகச் செய்த திட்டத்தை என் கணவக்குக்கூட நான் இது வரை கூறவில்லை. அது என் தாய்க்கு மட்டுமே தெரியும். அவள் நன்மை கோரித்தான் இந்த மறைநாடகம் நடத்த வேண்டி வந்தது.

"நான் இல்லாமல் என் துணைவரோ, துணைவர் இல்லாமல் நானோ வாழ முடியாது. தை என் தாய் அறிந்திருந்தாள். அதே சமயம் என் தந்தையை மீறி நான் நடக்க என் தாய் விரும்பவில்லை. இதனால் நான் ஒரு திட்டம் செய்தேன். என்னைப் போலவே தோன்றும்படி ஓர் உயிர்ச் சிலையை அருங் கலைஞன் ஒருவனைக் கொண்டு ஒரு நாளில் செய்வித்தேன். ஏற்கெனவே நான் சிலைபோல் கிடந்தவளாதலால், சிலையை அங்கே தாயிடம் விட்டு, என் துணைவனுடன் வெளியேறினேன்.