மன்பதைக் கதைகள்
93
பொதிந்த முழுமதிபோல் இளமைநலம் வாய்ந்திருந்தது. பொன்னாவிரையைப் பிரிந்து செல்வதனாலுண்டான துயரம் அவள் அழகை இன்னும் பெருக்கிக் காட்டிற்று.
பைஞ்ஞீலியின் தூய வெண்ணிலா மேனிக்கிசைய, பொன்னாவிரையின் மேனி பத்தரை மாற்றுச் செம்பொன்னைப் பழிப்பதாய் இருந்தது. அவள் பசுநீல முடிகளின் அமைதியுடன் செம்பொன்னிறம் வாய்ந்த அவன் இளமுடி போட்டியிட்டது.
பைஞ்ஞீலியின் துயரைவிட அவன் துயர் குறைந்த
தல்லவாயினும் அவளைத் தேற்றும் முறையில் அவன் தன்னையடக்கிக் கொண்டு இன்னுரையாடி இருந்தான்.
கலத்திலேயே பைஞ்ஞீலி கலம் துறைமுகம் கடந்து செல்லுமளவும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவனும் துறைமுகத்திலிருந்து கலத்தையே கவனித்து நின்றான். பைஞ்ஞீலியின் முகம் கலத்தின் நிழலிலும், கலம் கடலலை களிலும் மறைந்து நெடுநேரம் ஆகும்வரை அவன் கடல் துறையைவிட்டு அகலவேயில்லை.
மாதம் தவறாமல் தாயகத்துக்கு வரும்போது அஞ்சல் தூதர் மூலம் பைஞ்ஞீலி தன் ஆராத் துயரைப் பொன்னாவிரைக்குத் தெரிவித்தாள்.பொன்னாவிரையும் அதுபோலவே தன் ஆறுதல் மொழிகளைப் பைஞ்ஞீலிக்குத் தெரிவித்தான். கடும் உழைப்பால் காசு திரட்டிக்கொண்டு பழந்தீவுக்கு விரைந்து செல்ல அவன் எண்ணியிருந்தான். அதுவரை தன் பங்குக்குரிய நிலத்தை அவளே பயிரிடும்படி கூறி, அதற்கான தன் ஆணைப் பத்திரத்தையும் அவன் அவளுக்கு அனுப்பி வைத்தான்.பயணத்துக்கு வேண்டிய தொகையைத் தானும் தன்னாலியன்றவரை திரட்டி அனுப்ப முயல்வதாக அவளும் எழுதியிருந்தாள்.
அலைகடலின் எல்லையற்ற பரப்பு அவர்கள் இருவரையும் பிரித்தது. ஆனால் தனித்தனியே தொலைவில் இருந்த ஒரே இதயத்தின் இருபாதிகளாக அவர்கள் ஒருவரை ஒருவர் நினைத்த வண்ணம் நாட்கழித்தனர்.
சேரநாடு அன்று சோழர் காலடியில் கிடந்தது. இரண்டு தலைமுறைப் போராட்டங்கள் காரணமாக நாட்டில் கோர வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடின. அந்நிலை ஒழித்துச்