பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

97

மணிகள்கூடக் கிடைக்கக் கூடும். முந்திச் செல்வதால் உள்ள முழுப்பயனும் உங்களுக்கு வளமளிக்கட்டும்" என்றான்.

கடைசி வாசகம் அவள் உள்ளத்தில் புத்தலைகளை எழுப்பிற்று. தன் உயிர் நண்பனை விரைவில் தன்னிடம் வரவழைக்க இது உதவக்கூடும்! இக்கருத்து அவளுக்குப் புது வலிமை தந்தது. அவள் சிலம்பனை வாயார வாழ்த்தி, வீட்டைச் சார்த்திப் பூட்டிவிட்டு இரவோடு இரவாகப் புறப்பட்டாள்.

முன்னறிவுடன் தன்னிடமிருந்த சில அப்பங்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டாள். ஒரு நீர்க்கலமும் நீண்ட கத்தியும் அவள் இடையில் தொங்கின. கயிற்றின் ஒரு சிறு சுருளை அவள் அரையில் சுற்றிக்கொண்டு எழுந்தாள்.

சிலம்பன் கூறிய அடையாளம் அவளுக்கு நன்கு பயன்பட்டது. நள்ளிரவுக்குள் அவள் மலையேறி இறங்கி விட்டாள். ஆனால் நள்ளிரவில் தடம் தவறிற்று. அவள் சுற்று முற்றும் திரிந்து அலுப்புடன் ஒரு மரத்தின்மீது சாய்ந்தாள். அவள் கைகள் அதன் கிளைகளைத் தழுவின. ஆனால் அடுத்த கணம் அவளுக்கு மீன்டும் நம்பிக்கை வந்தது. பிடித்த மரக்கிளையே முறிக்கப்பட்டிருந்தது. கருக்கிருட்டில் சுண்ணத் தடம்கூடத் தெரியவில்லை. ஆனால் அவள் பொறுமையுடன் காத்திருந்தாள். வானத்தில் கவிந்த கருமேகங்கள் அகன்றபின் தடம் மீன்டும் தெரிந்தது.

காட்டில் தனியே செல்வதற்கு அவளுக்கு அச்சமாகத்தான் இருந்தது. அத்தீவில் மற்றக் கொடு விலங்குகள் இல்லா விட்டாலும் நாற்புறமும் நரிகளின் ஊளையும் செந்நாய்களின் கூச்சலும் கேட்டன. பொன்னாவிரையின் எண்ணமொன்றே அக்காட்டில் செல்லும் மன உரத்தை அவளுக்கு அளித்தது. ஆனால் நில இடுக்கை அணுகியபோது அவள் அச்சம் இன்னும் மிகுதியாயிற்று. கடலின் அலைகள் இருபுறமிருந்தும் அவள் காலடிகளையே வந்து தழுவின. எங்கே நில இடுக்கில் கடல் பாய்ந்து விடுமோ என்றும், எங்கே இந்தக் குறுகிய நிலத்தில் தடந்தவறித் தான் கடலில் சறுக்கி விழ நேருமோ என்றும் அவள் நடுங்கினாள். ஆனால் கண்ணில் ஆடிய தூக்கச் சோர்வை அகற்றி விழிப்புடன் அடிமேல் அடிவைத்து அவள் நடந்தாள்.