பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அப்பாத்துரையம் - 39

நில இடுக்கைக் கடந்ததே எல்லையற்ற பெரும்பரப்பில் பசுங் கழனிகள், சோலைகள், அகல் வெளிகள், தனி மனைகள் கண்டு அவள் வியப்படைந்தாள். எங்கும் எவ்வகை அரவமும் இல்லை. ஆனால் அகல் வெளியை அணுக அவள் தயங்கினாள். சிறு சிறு கடல்கள்போல ஆடுகளும் மாடுகளும் அங்கே ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு திரிந்தன. அவற்றினிடையே அச்சமயம் தனியே செல்வது நல்லதல்ல என்று எண்ணி அவள் ஒதுங்கி மனைகளின் பக்கமாகச் பக்கமாகச் சென்றாள். சற்று அகலமான வளைவுக்குள்ளிருந்த ஒரு தோட்ட வீட்டுக்குள் அவள் புகுந்தாள். உள்ளே யாரும் இல்லை. அழகிய குட்டையான ஒரு சிவலைப் பசு மட்டுமே அதில் திரிந்தது. அது வெளியே ஓடிவிடாதபடி கோட்டக் கதவை உள்ளிருந்து தாழிட்ட வண்ணம் அவள் மனைக்குள் சென்றாள்.

அவசர அவசரமாக ஆட்கள் வெளியேறிச் சென்ற அடையாளங்கள் எங்கும் தெரிந்தன. பாதி உண்ட உணவுடன் கலங்கள் கிடந்தன. பெட்டிகள் பாதி மூடியும் பாதி திறந்தும் காணப்பட்டன. ஆடைகள் அணிமணிகள் தாறுமாறாகக் கலைந்துகிடந்தன. அவசர அவசரமாக ஒரு சிலவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மக்கள் விரைந்தோடியிருந்தனர் என்பது தெள்ளத் தெளிய விளங்கிற்று.

நல்லுணவாகச் சிறிது எடுத்து அவள் உண்டாள். தன்னிடமுள்ள அப்பத்திலும் நீரிலும் அவளுக்கு ஒரு சிறிதே தேவைப்பட்டன. இதன்பின் நடந்து வந்த அலுப்புத் தீர அவள் சற்றுப் படுத்து ஓய்வுகொள்ள முயன்றாள்.

அவள் கண்கள் புத்தனுபவங்களுக்கிடையில் முற்றிலும் அயர்ந்துறங்க மறுத்தன. உடல் மட்டுமே சிறிது ஓய்வுகொண்டது. படுக்கும்போதே சுவரின் ஒரு பகுதி அவள் கவனத்தைக் கவர்ந்தது. சுவரின் சுண்ணம் அகற்றப்பட்டிருந்தது. அவ்விடத்தில் செங்கல்கள் வெளியே தெரிந்தன. ஆனால் செங்கல்களிடையே ஒன்று நிறத்திலும் உருவத்திலும் வேறுபட்டிருந்தது. அது அரும்பொருள் புதைத்த இடமாயிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றிற்று. ஆனால் வெளியே சென்றவர்கள் அதை எடுத்துச் சென்ற தடமே இது என்று எண்ணினாள். அயர்வினால் இதை அவள் அப்போது சென்று உறுதிக சென்று உறுதிகாண இயலவில்லை. ஆனால்